www.garudabazaar.com
iTechUS

"பொம்பளைங்கன்னா லட்சணமா" - ஜிபி முத்து.. "அப்படி கிடையாது" - பிடிக்காமல் ரியாக்ட் செய்த விக்ரமன்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முந்தைய போட்டியாளர்கள் ஒவ்வொருவராக உள்ளே நுழைந்து வருவது பார்வையாளர்கள் அனைவரையும் உற்சாகம் அடைய வைத்துள்ளது.

Vikraman and GP Muthu discussion about vessel cleaning

Also Read | "வந்ததும் திரும்ப ஆரம்பிக்காதீங்க, சரியா?".. முட்டிக்கொண்ட அசிம், மகேஸ்வரி.. "ஆஹா, இது அதுல்ல"!!

முன்னதாக கடந்த வார இறுதியில் பிக் பாஸ் வீட்டில் இருந்து ரச்சிதா வெளியேறி இருந்தார். இதற்கு மத்தியில்,   Ticket To Finale டாஸ்க்கில் வெற்றி பெற்ற அமுதவாணன், முதல் ஆளாக Finale சுற்றுக்கு முன்னேறி இருந்தார்.

இனி வரும் நாட்கள் ஒவ்வொன்றும் உள்ளே இருக்கும் ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் முக்கியம் என்பதால் அனைவரும் சிறப்பாகவும் விளையாடி வருகின்றனர்.

Vikraman and GP Muthu discussion about vessel cleaning

இந்த வாரம், இதே சீசனில் முன்பு வெளியேறி இருந்த போட்டியாளர்களான ராபர்ட், அசல் கோலார், ஜிபி முத்து, சாந்தி, தனலட்சுமி, மணிகண்டா, குயின்சி நிவாஷினி, ராம், மகேஸ்வரி உள்ளிட்டோரும் அடுத்தடுத்து வருகை தந்து மீண்டும் உள்ளே தங்கி பட்டையை கிளப்பி வருகின்றனர். இந்த சீசனில் ஆரம்பத்தில் இருந்த நிறைய போட்டியாளர்கள் மீண்டும் பிக் பாஸ் வீட்டில் இருப்பதால், அமரக்களமாகவும் பிக் பாஸ் வீடு இருக்கிறது.

Vikraman and GP Muthu discussion about vessel cleaning

அமுதவாணன், விக்ரமன் மற்றும் ஜிபி முத்து ஆகியோர் சமையல் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். சமையல் பொருட்களை தயார் செய்து கொண்டிருக்க, பாத்திரத்தை சுத்தமாக கழுவும் படியும் அங்குள்ள பெண் போட்டியாளர்களிடம் அறிவுறுத்துகிறார் ஜிபி முத்து.

அப்போது, "பொம்பள புள்ளைங்க லட்சணமா கழுவணும் என்ன, சொல்லிட்டேன்" என தெரிவிக்கிரர். இதற்கடுத்து பேசும் விக்ரமன், "பொம்பள புள்ளன்னு இல்ல, யாரு வேணா கழுவலாம்" என கூறவே, "பொம்பள புள்ளைன்னா லட்சணமா இருக்கும்" என ஜிபி முத்து தெரிவிக்கிறார்.

Vikraman and GP Muthu discussion about vessel cleaning

இதனையடுத்து பேசும் விக்ரமன், "அது என்னது பொம்பள புள்ளையா லட்சணமா?. யாரு வேணா கழுவலாம்ணே. நீங்களும் கழுவுறீங்க. நானும் கழுவுறேன்" என்றதும் மீண்டும் பேசும் ஜிபி முத்து, "பொம்பளைங்க கழுவுனா ஒரு வித்தியாசம் அதிகமா இருக்குல்ல" என்கிறார். "அவர் ஒரு பாசமா சொன்னாரு, அன்பா சொன்னாரு புரியுதா" என ஜிபி முத்துவுக்கு ஆதரவாக அமுதவாணன் விக்ரமனிடம் பேசுகிறார்.

Vikraman and GP Muthu discussion about vessel cleaning

இறுதியில் பேசும் விக்ரமன், "அப்படி கிடையாதுங்க. எல்லாருமே கரெக்டா, பர்ஃபெக்ட்டா கழுவணும். இப்ப ADK-வ கூப்பிட்டு கழுவ சொல்லுங்க, சூப்பரா கழுவுவாரு. நானும் சூப்பரா கழுவுவேன்" என்கிறார். ஆனால் தொடர்ந்து பேசும் ஜிபி முத்து, இல்லங்க பெண்கள் செய்வதில் வித்தியாசம் இருக்கு என கூற, அப்படி கிடையாது என விக்ரமன் அதை மறுத்து பேசிக் கொண்டும் இருக்கிறார்.

Also Read | "அந்த ஒரு வரில நின்னுட்டய்யா".. Bigg Boss வீட்டில் அசிம் எழுதிய வாசகம்.. எமோஷனல் ஆன பார்வையாளர்கள்

தொடர்புடைய இணைப்புகள்

Vikraman and GP Muthu discussion about vessel cleaning

People looking for online information on Bigg boss 6 tamil, Bigg Boss Tamil 6, GP MUTHU, Vijay tv, Vikraman will find this news story useful.