www.garudabazaar.com

Reshma Pasupuleti : “என் அந்தரங்க வீடியோ லீக் ஆச்சுனு போன் பண்ணாங்க..” - டிவி நிகழ்ச்சியில் உடைத்த ரேஷ்மா.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ரேஷ்மா பசுபுலேட்டி. பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய முதன்மை கதாபாத்திரங்களில் ஒன்றான ராதிகா என்கிற கதாபாத்திரத்தில் ரேஷ்மா பசுபுலேட்டி நடித்து வருகிறார். இந்த சீரியலில் இவருக்கும் பாக்கியலட்சுமிக்கும் இடையில் தான் கதை ஊசலாடுகிறது.

Baakiyalakshmi Reshma Pasupuleti about her leaked video rumour

இன்னொரு புறம் ரேஷ்மா பசுபுலேட்டி, கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிவந்த விஷ்ணு விஷால் நடிப்பிலான வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் மாதிரி என்கிற திரைப்படத்தில் புஷ்பா எனும் கேரக்டரில் நடித்து பிரபலமானார். திரையுலக வெளிச்சம் மட்டுமன்றி சின்னத்திரை வெளிச்சமும் கொண்டு நடித்து வரும் ரேஷ்மா பசுபுலேட்டிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் பிரபல விவாத நிகழ்ச்சியான ஜீ தமிழ் தொலைக்காட்சியின் தமிழா தமிழா என்கிற நிகழ்ச்சியில் கரு. பழனியப்பன் தொகுத்து வழங்க, இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றிருந்த ரேஷ்மா பசுபுலேட்டி தனக்கு நடந்த டிஜிட்டல் உலக அனுபவம் குறித்து பேசி இருந்தார். அதன்படி தன்னுடைய இமேஜை கொண்டு மார்ஃப் செய்யப்பட்டு வீடியோ ஒன்று வெளியாகி இருந்ததாக ரேஷ்மா பசுபுலேட்டி கூறுகிறார்.

அதில், “என்னுடைய சகோதரி எனக்கு திடீரென்று ஃபோன் செய்து உன்னுடைய அந்தரங்க வீடியோ வெளியாகி இருக்கிறது என்று கூறினார். நான் அமெரிக்காவில் இருக்கிறேன், எனக்கு ஆளே இல்லை, என்னுடைய வீடியோ எப்படி ரிலீஸ் ஆக முடியும். எங்கே முதலில் அந்த வீடியோவை எனக்கு அனுப்பி விடு என்று கூறினேன். ஆக்சுவலி என்னுடைய அம்மா என்னிடம் நேரடியாக கேட்காமல் என்னுடைய சகோதரியிடம் இதைச் சொல்லி இருக்கிறார்.

ஆனால் என்னுடைய தந்தை தயாரிப்பாளர். சகோதரர் நடிகர். என்னுடைய குடும்பம் சினிமா பின்னணியில் உள்ளதால் இதை புரிந்து கொண்டார்கள். ஆனால் திரைப்பின்னணியில் இல்லாத எளிய பெண் ஒருவருக்கு இப்படி நடந்தால் நிச்சயமாக அவர் பாதிக்கப்பட்டிருப்பார். கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பார். சிலர் தற்கொலை வரை சென்று இருப்பார்கள். என்னுடைய குடும்பம் இதை அருமையாக ஹேண்டில் செய்தது” எனக் குறிப்பிட்டுள்ளார்

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Baakiyalakshmi Reshma Pasupuleti about her leaked video rumour

People looking for online information on Baakiyalakshmi, Reshma Pasupuleti, Thamizha thamizha, Vijay Television, Vijay tv, Zee Tamil will find this news story useful.