www.garudabazaar.com

சூடு பிடிக்கும் தேர்தல்.. ஜெயிக்கப்போவது ராதிகாவா? பாக்யாவா? பரபரப்பான பாக்கியலட்சுமி தொடர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் தொலைக்காட்சியில்  ஒளிபரப்பாகி வரும் மெகாதொடர் பாக்கியலட்சுமி.

Baakiyalakshmi Serial This Week Episode Glimpse Video

Also Read | ஜெயிலர் படத்தில் ரஜினி கேரக்டர் பெயர் இது தான்! போஸ்டருடன் வெளியான சூப்பர் தகவல்

இந்த மெகாதொடருக்கு  அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் பெரும் ஆதரவு உள்ளது. இதில் பாக்கியலட்சுமி எனும் முதன்மை கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருபவர் நடிகை கே.எஸ். சுசித்ரா.

பாக்கியலட்சுமி மாதிரி ஒரு அப்பாவியான, அதே வேளையில் மிகவும் அன்புடன் தனது குடும்பத்தினரை பார்த்து கொள்ளும் மனைவி பாக்கியலட்சுமியையும், ராதிகாவையும் பலே ஆளாக நாடகம் போட்டு கோபி நீண்ட காலம் ஏமாற்றி வந்தார். 

Baakiyalakshmi Serial This Week Episode Glimpse Video

பின்னர் மனைவி பாக்கியலட்சுமியை விவாகரத்து செய்து விட்டார் கோபி. விவாகரத்து செய்ததோடு ராதிகாவை திருமணம் செய்தும் கொண்டார் கோபி.

இதன் பின்னர், பாக்கியலட்சுமி தொடரில் ஏகப்பட்ட திருப்புமுனைகள் அடுத்தடுத்து அரங்கேறி கொண்டிருக்கிறது.

Baakiyalakshmi Serial This Week Episode Glimpse Video

கோபியின் இரண்டாம் திருமணத்திற்கு பிறகு பாக்கியலட்சுமி, தன்னுடைய மகன்கள், மகள், மருமகள், மாமியார், மாமனாருடன் அதே குடும்பத்தில் வசித்துவருகிறார். ஆனால் கோபி வீட்டை விட்டு வெளியேறி ராதிகாவுடன் இணைந்து வாழ்ந்து வருகிறார்.

மேலும், தனது இரண்டாவது மனைவி ராதிகாவுடன் பாக்கியலக்ஷ்மி இருக்கும் வைதேகி நகரில் உள்ள வீட்டுக்கு குடியேறியுள்ளார் கோபி.

Baakiyalakshmi Serial This Week Episode Glimpse Video

தற்போது ராதிகா & பாக்கியலட்சுமி வசித்து வரும் வைதேகி நகர் குடியிருப்பு சங்க நிர்வாகிகளை தேர்வு செய்யும் தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் ராதிகாவை எதிர்த்து பாக்கியலட்சுமி போட்டியிடுகிறார். ராதிகாவுக்கு ஆதரவாக கோபியும், பாக்யாவுக்கு ஆதரவாக மொத்த குடும்பமும் களமிறங்கி உள்ளனர். இன்றைய ப்ரோமோ வீடியோவில் தேர்தல் முடிவு அறிவிப்பு வெளியாக உள்ளதாக காண்பிக்கப்படுகிறது.

Also Read | சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாள்.. ஒரே வரியில் வாழ்த்தி அசத்திய நடிகர் தனுஷ்..

தொடர்புடைய இணைப்புகள்

Baakiyalakshmi Serial This Week Episode Glimpse Video

People looking for online information on Baakiyalakshmi, Baakiyalakshmi serial, Baakiyalakshmi Serial Episode, Vijay Television, Vijay tv will find this news story useful.