www.garudabazaar.com

"சிம்பு பிடிச்சது ரப்பர் பாம்பு தான்"....விலகியது குழப்பம்... STR ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சமீபநாட்களில் சுசீந்திரன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் ‘ஈஸ்வரன்’ பட வீடியோ காட்சி ஒன்று லீக் ஆனது. இதில் பாம்பு ஒன்றை சிலம்பரசன் பிடித்து இருப்பது போன்ற வீடியோ காட்சியை பார்த்து, அதில் ஒர்ஜினல் பாம்பை வைத்தே படமாக்கப்பட்டதாக வனத்துறைக்கு சந்தேகம் எழ, வன இலாகா அதிகாரிகள் படக் குழுவினருக்கு  விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினர்.

good news for simbu fans regarding snake video controversySTR ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்

இயக்குநர் சுசீந்திரன், வன அதிகாரிகளிடம் நேரில் சென்று, சிலம்பரசன் நடிக்கும் “ஈஸ்வரன்” படத்தில் ரப்பர் பாம்பை வைத்து, எவ்வளவு நுணுக்கமாக தத்ரூபமாக படமாக்கினோம் என்பதை, கிராபிக்ஸ் செய்யப்பட்ட வீடியோ காட்சிகளுடன் விளக்கம் அளித்தார். 

இது தொடர்பாக வன துறை அதிகாரி கிளமண்ட் எடிசன் அவர்களிடம் கேட்டபோது, "பொதுவாக விலங்கினங்களை வைத்து படமாக்குவதற்கு வன துறையினரிடம் முறையான அனுமதி பெற வேண்டும்.  ‘ஈஸ்வரன்’ படக்குழுவினர்,  ரப்பர் பாம்பை வைத்து கம்பியூட்டர் கிராபிக்ஸ் துணையுடன்( CG ) எப்படியெல்லாம் சினிமாடிக் டிரிக்  செய்தோம் என்று விளக்கினார்கள்.  அதை பார்த்த பின்பு தான் அந்த காட்சியில் இடம் பெற்றது நிஜ பாம்பு இல்லை என்று உறுதியானது. இந்த காட்சி எடுத்தது குறித்து எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை" என்று  கருத்து தெரிவித்தார்.

Tags : Simbu, Easwaran

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

good news for simbu fans regarding snake video controversySTR ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்

People looking for online information on Easwaran, Simbu will find this news story useful.