www.garudabazaar.com

சிம்பு நன்றி தெரிவித்து எமோஷனல்.. வெளியான லேட்டஸ்ட் புகைப்படங்கள். அட..! இது First Look-கும் மேல

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சிம்புவின் புதிய புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

சிம்பு புதிய புகைப்படங்கள் | Simbu new stills in black dress goes viral in nets

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் சிம்பு. சிறுவயதில் இருந்தே நடித்து வரும் இவர், பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தின் நடித்து வருகிறார். கொரோனா வைரஸ் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாநாடு ஷூட்டிங், விரைவில் தொடங்கவுள்ளது.

சிம்பு புதிய புகைப்படங்கள் | Simbu new stills in black dress goes viral in nets

இதனிடையே தற்போது சிம்பு, சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியானது. உடல் எடை குறித்து, மாஸ்-ஆக வெளியான சிம்புவின் லுக்கை கண்டு ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். 

சிம்பு புதிய புகைப்படங்கள் | Simbu new stills in black dress goes viral in nets

இந்நிலையில் தற்போது சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு எமோஷனல் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, ''என்னை வழிநடத்தி, இந்த மாற்றத்திற்கு உதவியாக அமைந்த பெரும் சக்திக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மேலும் எனக்கு அளவில்லா அன்பை கொடுத்துவரும் எனது ரசிகர்களுக்கு நன்றி. உங்கள் அன்பே எனது உலகம்'' என பதிவிட்டுள்ளார். 

சிம்பு புதிய புகைப்படங்கள் | Simbu new stills in black dress goes viral in nets

மேலும் இத்துடன் கருப்பு உடையில் நடிகர் சிம்புவின் செம ஸ்டைலிஷான புகைப்படங்களும் வெளியாகியுள்ளது. இந்த போட்டோக்களை கண்டு ரசிகர்கள், அட, இது ஃபர்ஸ்ட் லுக்கை விட மாஸாக இருக்கிறதே என ரசிகர்கள் கமன்ட்ஸ் கொடுக்க, இந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது. 

 

 

தொடர்புடைய இணைப்புகள்

சிம்பு புதிய புகைப்படங்கள் | Simbu new stills in black dress goes viral in nets

People looking for online information on Eeswaran, Simbu, Simbu Latest Photos, Str, Suseenthiran will find this news story useful.