நடிகர் சிம்புவின் திருமணம்... உறுதியளித்த தந்தை டி.ராஜேந்தர்... செம குஷியில் ரசிகர்கள்..!
முகப்பு > சினிமா செய்திகள்சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கும் 'மாநாடு' படத்திற்கு பிறகு, இயக்குனர் சுசீந்திரன் இயக்கும் படத்தில் நடிக்கிறார் சிம்பு. படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் முதல் தோற்ற போஸ்டரை சமீபத்தில் வெளியிட்டனர் . இது சிம்புவின் 46 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. கையில் பாம்புடன் சிம்பு, இதுவரை பார்த்திராத கிராமத்து கெட்டப்பில் 'ஈஸ்வரன்' படத்தின் மரண மாஸ் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வைரலாகி வருகிறது.

பார்ப்பதற்கு செம மாஸாக இருக்கும் இந்த படத்தின் போஸ்டர், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்த படத்திற்க்காக அவர் வெகுவாக உடல் எடையை குறைத்துள்ளார். இந்நிலையில் மீண்டும் அவர் டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் இணைந்துள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதே போல அடுத்தடுத்த படங்களின் அறிவிப்பும் சிம்பு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் சிம்புக்கு எப்பொழுது திருமணம் என்று ரசிகர்கள் மிகவும் ஆவலாக உள்ளனர். இதுபற்றி பேசிய சிம்புவின் தந்தையும் நடிகருமான டி.ராஜேந்தர் ஒரு உறுதியான தகவல் அளித்துள்ளார். அவர் கூறும்போது "ஈஸ்வரன் பட தலைப்பிலேயே 'வரன்' உள்ளது. 2021-ஆம் ஆண்டில் சிலம்பரசனுக்கு நல்ல வரன் கிடைக்கும்" என்று கூறியுள்ளார். இந்த செய்தி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.