www.garudabazaar.com

கையில் பாம்புடன் சிம்பு.. ஈஸ்வரன் படத்தின் மரண மாஸ் பர்ஸ்ட் லுக்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'மாநாடு' படத்திற்கு பிறகு, இயக்குனர் சுசீந்திரன் இயக்கும் படத்தில் நடிக்கிறார் சிம்பு. படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் முதல் தோற்ற போஸ்டர் இன்று அக்டோபர் 26 வெளியாகி உள்ளது. இது சிம்புவின் 46 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. கையில் பாம்புடன் சிம்பு, இதுவரை பார்த்திராத கிராமத்து கெட்டப்பில் 'ஈஸ்வரன்' படத்தின் மரண மாஸ் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வைரலாகி வருகிறது. சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கும் 'மாநாடு' படத்திலும், தற்போது சுசீந்திரனின் இந்த படத்திலும் பிஸியாக நடித்து வருகிறார் சிம்பு.

actor simbu 46 film first look poster released சிம்பு நடிக்கும் 46-வது படம் பர்ஸ்ட் லுக்

பார்ப்பதற்கு செம மாஸாக இருக்கும் இந்த படத்தின் போஸ்டர், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்த படத்திற்க்காக அவர் வெகுவாக உடல் எடையை குறைத்து 'தொட்டி ஜெயா' சிம்புவாக மிளிர்கிறார்.  கடந்த 2017-ம் ஆண்டு, ஆகஸ்ட் 15 அன்று சமூக வலைதளங்களில் இருந்து விலகினார் சிம்பு.

இந்நிலையில் மீண்டும் அவர் டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் இணைந்துள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதே போல அடுத்தடுத்த படங்களின் அறிவிப்பும் சிம்பு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கையில் பாம்புடன் சிம்பு.. ஈஸ்வரன் படத்தின் மரண மாஸ் பர்ஸ்ட் லுக்..! வீடியோ

actor simbu 46 film first look poster released சிம்பு நடிக்கும் 46-வது படம் பர்ஸ்ட் லுக்

People looking for online information on Eshwaran, First Look, Simbu will find this news story useful.