www.garudabazaar.com

விஜய், சிம்பு, கார்த்தி படங்கள்.. பொங்கல் ரேஸ் ஆரம்பமாகிறதா.?! - அப்படி நடந்தா.?!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகத்தையே அச்சுறுத்திய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் எதிரொலித்தது. இதை தொடர்ந்து நாடு முழுவதும் ஊரடங்கு போடப்பட்டது. இதனால் திரைத்துறை சார்ந்த படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன. தியேட்டர்கள் மூடப்பட்டன. 

பொங்கல் ரிலீஸ் படங்கள் | Vijay's master simbu's eeswaran karthi's sultan might release for pongal 2021

இதையடுத்து ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில், தியேட்டர்களை திறக்க மத்திய அரசு அனுமதியளித்தது. இதை தொடர்ந்து இந்தியா முழுவதும் திரையரங்கங்கள் திறக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் இதற்கான அனுமதி வழங்கப்படவில்லை. இதுகுறித்து திரையரங்க உரிமையாளர்கள் சங்கமும் முதலமைச்சரிடம் கோரிக்கையை முன்வைத்தது. விரைவில் அரசு அறிவிப்பு வரலாம் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

இந்த நிலையில் அடுத்த வருடம் பொங்கலுக்கு தமிழில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படும் திரைப்படங்களாக மாறி இருக்கின்றன விஜய்யின் மாஸ்டர், சிம்புவின் ஈஸ்வரன் மற்றும் கார்த்தியின் சுல்தான். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதமே வெளியாகவிருந்தது. ஆனால் ஊரடங்கு காரணமாக அதன் ரிலீஸ் தள்ளிப்போக, மாஸ்டர் படக்குழு படத்தை பொங்கலுக்கு வெளியிடலாம் என்ற திட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. 

பொங்கல் ரிலீஸ் படங்கள் | Vijay's master simbu's eeswaran karthi's sultan might release for pongal 2021

மேலும் தற்போது சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கி வரும் திரைப்படம் ஈஸ்வரன். இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் இன்று வெளியாகி, ரசிகர்களின் லைக்ஸை குவித்து வருகிறது. இத்திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல கார்த்தி நடிப்பில் 'ரெமோ' பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ள திரைப்படம் சுல்தான். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. கார்த்தி, ராஷ்மிகா ஜோடி சேர்ந்துள்ள இத்திரைப்படம், பெரும் பட்ஜட்டில் உருவாகியிருப்பதாக கூறப்படுகிறது. இத்திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாகலாம் என்ற ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

பொங்கல் ரிலீஸ் படங்கள் | Vijay's master simbu's eeswaran karthi's sultan might release for pongal 2021

எப்படியும் திரையரங்கங்கள் திறக்கப்பட்ட பின்னர், பெருமளவில் ரசிகர்கள் கூட்டம் வருமா என்ற விவாதங்களை சமூக வலைதளங்களில் காண முடிகிறது. இன்னொரு பக்கம் ஓ.டி.டி தளங்களில் திரைப்படங்களின் நேரடி வெளியிடுகள் தற்போது சூடு பிடித்து வருகிறது. இந்த நிலையில் தியேட்டர்களுக்கு ரசிகர்களை கொண்டு வர, பெரிய ஹீரோக்களின் படங்களால் மட்டுமே முடியும் என்று கூறுகின்றனர் கோலிவுட் வாசிகள். பார்க்கலாம்., மேற்கண்ட திரைப்படங்கள் பொங்கல் ரேசில் போட்டி போட்டால்., தியேட்டர்களிலும் கூட்டம் அள்ளும்., ரசிகனின் மனமும் துள்ளும்.!!

தொடர்புடைய இணைப்புகள்

பொங்கல் ரிலீஸ் படங்கள் | Vijay's master simbu's eeswaran karthi's sultan might release for pongal 2021

People looking for online information on Eeswaran, Karthi, Master, Pongal Tamil Release, Simbu, Str, Sultan, Vijay will find this news story useful.