ஹன்சிகாவுக்கு வில்லனாகும் பிரபல கிரிக்கெட் வீரர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோயினாக வலம் வரும் நடிகை ஹன்சிகா நடிப்பில் உருவாகவிருக்கும் அடுத்த படத்தில் பிரபல இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

Former Indian Cricketer Sreesanth to play villain in Hansika film

தமிழ் சினிமாவில் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் பல முன்னணி ஹீரோயின்கள் நடித்து வரும் நிலையில், நடிகை ஹன்சிகாவும் அதே போன்று தனித்துவம் வாய்ந்த ஹீரோயிசம் கதையில் நடிக்கவிருக்கிறார். தற்போது இயக்குநர் ஜமீல் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மஹா’ திரைப்படத்தில் ஹன்சிகா மோத்வானி நடித்து வருகிறார். ஹன்சிகாவின் 50வது படமான ‘மஹா’-வில் கெஸ்ட் ரோலில் நடிகர் சிம்பு நடித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து ஹன்சிகா நடிப்பில் உருவாகவிருக்கும் ஹாரர் காமெடி திரைப்படத்தில் நடிக்க இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதன் மூலம் ஸ்ரீசாந்த் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகிறார். இவர், ஹிந்தியில் சல்மான் கான் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ் சீசன் 12’ நிகழ்ச்சியின் இரண்டாவது வெற்றியாளர் ஆவார்.

பார்த்திபன் மற்றும் சனம் ஷெட்டி நடிப்பில் வெளியான முதல் ஸ்டீரியோஸ்கோபிக் படமான ‘அம்புலி’ படத்தை இயக்கிய ஹரி ஷங்கர் மற்றும் ஹரீஷ் நாராயண் இணை ஹன்சிகா நடிக்கவிருக்கும் படத்தை இயக்குகின்றனர்.

சமீபத்தில் யோகிபாபு நடிப்பில் வெளியான ‘தர்மபிரபு’ திரைப்படத்தை தயாரித்த ஸ்ரீ வாரி ஃபிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் வரும் டிசம்பர் மாதம் சென்னையில் தொடங்கும் என்றும், அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.