தமிழகத்தில் உள்ள 38 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது.
இதையடுத்து, இன்று காலை 7 மணி முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடன் தங்களது வாக்குகளை பதிவு செய்த நிலையில், மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
வாக்கு எண்ணிக்கை வரும் மே.23ம் தேதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்தலில் பொதுமக்களும், திரை பிரபலங்களும் ஏராளமானோர் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.
இந்நிலையில், பிரபல திரைப்பட விநியோகஸ்தர் சக்திவேலன், இளம் தலைமுறையினர் இடையே இருக்கும் அரசியல் புரிதல் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அவரது ட்வீட்டில், இளைய தலைமுறை வாக்காளர்களில் பெரும்பாலானவர்களுக்கு அரசியல் குறித்த அடிப்படை புரிதல் இல்லை என்பது வருத்தமளிக்கிறது. கிரிக்கெட் குறித்த அறிவில் 10% கூட அரசியல் தெரிகிறதா எனத்தெரியவில்லை!’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இளைய தலைமுறை வாக்காளர்களில் பெரும்பாலானவர்களுக்கு அரசியல் குறித்த அடிப்படை புரிதல் இல்லை என்பது வருத்தமளிக்கிறது.
— Sakthivelan B (@sakthivelan_b) April 18, 2019
கிரிக்கெட் குறித்த அறிவில் 10% கூட அரசியல் தெரிகிறதா எனத்தெரியவில்லை!
#கசப்பான_உண்மை#அரசியல்_பழகு #Election2019 #youthvote