கொரோனாவால் ஆளே மாறி போன பிக்பாஸ் நடிகர்...அடையாளமே தெரியலையே... ரசிகர்கள் ஷாக்...!
முகப்பு > சினிமா செய்திகள்உலகம் முழுவதும் கொரோனா நோய் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இந்நோயின் தாக்குதலைக் குறைக்கும் வண்ணம் 21 நாள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நோய் பல பிரபலங்களுக்கும் பரவி வருகிறது. படப்பிடிப்புகள் எல்லாம் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் பிரபலங்களும் வீட்டில் அடைந்து இருக்கின்றனர். இதனையடுத்து பல பிரபலங்களும் தங்களது ரசிகர்களோடு சமூக வலைத்தளங்கள் மூலமாக பேசி மகிழ்கின்றனர்.

இந்நிலையில் பிக்பாஸ் மூலம் பிரபலம் அடைந்தவர் நடிகர் கவின். அவரது புது படமான 'லிப்ட்' ப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் தான் வெளியானது. தற்போது ஊரடங்கால் வீட்டில் இருக்கும் அவர், தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை இன்ஸ்ட்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில் முகத்தில் தாடி மீசை எல்லாம் வெட்டாததால் ஆளே மாறி இருக்கிறார். இந்த புகைப்படத்தை பதிவிட்ட அவர் "As i am suffering from quarantine.." என்று வேடிக்கையாக தலைப்பிட்டு உள்ளார்.