பிரபல நடிகை கைது.... ஊரடங்கை மீறியதாக அதிரடி குற்றசாட்டு... சொகுசு கார் கைப்பற்றப்பட்டது...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் நடிகை மற்றும் மாடலான பூனம் பாண்டே. இவர் ஹிந்தி மற்றும் தெலுங்கு சினிமாவில் நடித்து வருகிறார். அதே போல்  2011-ம் ஆண்டு இந்தியா கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றால் நிர்வாணமாக ஓடுவேன் எனக்கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர். தற்போது ஊரடங்கை மீறியதாக  கைது செய்யப்பட்டுள்ளார். 

பிரபல நடிகை கைது ஊரடங்கை மீறியதாக அதிரடி குற்றசாட்டு Popular actress arrested for violating corona lockdown rules

பூனம் பாண்டே நேற்று தனது ஆண் நண்பருடன் மும்பை மெரைன் டிரைவ் சாலையில் சொகுசு காரில் சென்றுள்ளார். கொரோனா நேரத்தில் எவ்வித காரணமின்றி வெளியே வந்த காரணத்தால் அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் அவர்கள் மீது போலீசார் FIR உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர் . அவருடைய சொகுசு காரை பறிமுதல் செய்த போலீசார், அவர்களை எச்சரித்து தற்சமயம் விடுவித்தனர்.

Entertainment sub editor