''அத விஜய்யிடம் கேளுங்க'' - ரசிகருக்கு பிரபல ஹீரோயின் அதிரடி பதில்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் 'காற்று வெளியிடை' படத்தின் தமிழில் பிரபலமானவர் அதிதி ராவ்.  அதனைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய், அரவிந்த் சாமியுடன் இணைந்து 'செக்கச்சிவந்த வானம்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

Aditi Rao Hydari stuns everyone with her reply to a Thalapathy fan | தளபதி விஜய் குறித்து ரசிகரின் கேள்விக்கு அதிதி ராவ் பதில்

சமீபத்தில் மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளியான 'சைக்கோ' படத்தில் இவரது நடிப்பிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதிதி ராவ் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக விளங்கி வருகிறார்.

இந்நிலையில் நடிகை அதிதி தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது ரசிகர் ஒருவர் தளபதி விஜய்யுடன்  எப்பொழுது நடிக்கப்போகிறீர்கள் என கேட்க, அதற்கு அவர் 'இதனை தளபதி விஜய்யிடம் கேளுங்கள்'' என்றார். பின்னர் தல அஜித் குறித்து ஒரு வார்த்தையில் சொல்லுங்கள் என்று ரசிகர் கேட்க, நிரந்தரமான கிளாஸானவர் என்று தெரிவித்தார்.

Entertainment sub editor