Prank Eve teasing -ஐ விடக் கொடுமையானது! ஆடை பற்றி பார்த்திபன் Tweet
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Jul 21, 2019 04:47 PM
விஷால் நடித்த அயோக்யா படம் திரைக்கு வந்தபோது இந்த படம் நான் இயக்கிய உள்ளே வெளியே படத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இது அயோக்கியத்தனம் என்று டுவிட்டரில் செய்தி வெளியிட்டிருந்தார் பார்த்திபன். அந்த படத்தில் அவரும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
![Director R.Parthiban Tweet About aadai Movie And Prank Director R.Parthiban Tweet About aadai Movie And Prank](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/director-rparthiban-tweet-about-aadai-movie-and-prank-photos-pictures-stills.png)
இந்த நிலையில், தற்போது அமலாபால் நடிப்பில் வெளியாகியுள்ள ஆடை படத்தின் கதையும் என் படத்தின் தழுவல் தான் என்று டுவிட்டரில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார் பார்த்திபன்.
அவர் பதிவிட்டுள்ள செய்தியில், Prankly speaking - ஆடை படத்தின் மூலக்கருவான prank மூலம் பாதிக்கப்பட்ட பெண்ணை ஆணாக பின் கூட்டியே மாற்றி 2004ல் குடைக்குள் மழை வந்தது வன்மையான கண்டனத்திற்கு தண்டனைக்குரியது. 15 years பிறகும் ஒரு படம் உருவாக கருவான அந்த prank ஐ இன்னமும் (eve teasing ஐ விட கொடுமை) ஒழிக்காமல் இருப்பது என்று பதிவிட்டுள்ளார்.
PRANKly speaking-ஆடை படத்தின் மூலக்கருவான Prank மூலம் பாதிக்கப்பட்ட பெண்ணை ஆணாக பின்கூட்டியே மாற்றி 2004- 'குடைக்குள் மழை'வந்தது
வன்மையான கண்டனத்திற்கு + தண்டனைக்குரியது! 15 years பிறகும் ஒரு படம் உருவாக கருவான அந்த Prank-ஐ இன்னும்
(eve teasing-ஐ விட கொடுமை)
ஒழிக்காமல் இருப்பது pic.twitter.com/JuHxPQkAzB
— R.Parthiban (@rparthiepan) July 21, 2019