'விஜய் அந்த வார்த்தையை சொல்லும் போது...' - சர்ச்சைக்கு நடிகர் விவேக் விளக்கம்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Sep 25, 2019 10:41 AM
பெண்கள் ஃபுட்பால் மையமாக வைத்து தளபதி விஜய் நடித்து தீபாவளியை முன்னிட்டு வெளியாகவிருக்கும் படம் 'பிகில்'. அட்லி இயக்கியுள்ள இந்த படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது.
![Vivekh explains Sivaji Ganesan controversy in Vijay's Bigil audio launch Vivekh explains Sivaji Ganesan controversy in Vijay's Bigil audio launch](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/vivekh-explains-sivaji-ganesan-controversy-in-vijays-bigil-audio-launch-photos-pictures-stills.jpg)
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் விஜய்யின் பேச்சு மிகவும் வைரலானது. தமிழக அமைச்சர்கள் நடிகர் விஜய்யின் பேச்சுக்கு கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில் பிகில் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விவேக், நடிகர் சிவாஜி கணேசனின் பாடலை குறிப்பிட்டு விஜய் தொடர்பான வசனத்தை ஒப்பிட்டு பேசினார். இதற்கு சிவாஜி சமூக நலப் பேரவை கண்டனம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் ,''1960ல் 'இரும்புத்திரை' படத்தில் நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் பாடிய பாடலின் முதல் வரி “நெஞ்சில் குடி இருக்கும்”. அப்போது அது காதல் உணர்வைக் குறித்தது.ஆனால் இப்போது சகோ விஜய் அதை சொல்லும் போது மந்திர சக்தி வார்த்தையாக இருக்கிறது.இதுவே நான் பேசியது.அன்பு உள்ளங்கள் புரிந்து கொள்க'' என்று குறிப்பிட்டுள்ளார்.