நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த நடிகர் பார்த்திபன், விஜய் அதற்கு அளித்த பதிலை ஸ்க்ரீன் ஸாட் எடுத்து பதிவிட்டுள்ளார்.

ரசிகர்கள் வழக்கம் போல் விஜய்யின் பிறந்தநாளில் மக்களுக்கு உதவி செய்து கொண்டாடி வருகின்றனர். அதேபோல் இன்று பிறந்தநாள் கொண்டாடும் விஜய்க்கு திரையுலகினர் பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்
அந்த வகையில், நடிகர் பார்த்திபனும் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதற்கு விஜய் நன்றியும் தெரிவித்துள்ளார். இதை ஸ்க்ரீன் ஸாட்டாக எடுத்து பார்த்திபன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
பார்த்திபன் ஸ்க்ரீன் ஸாட்டோடு குறிப்பிட்டுள்ளதாவது, 49 நிமிடங்களில்... பிகில் போல் வாழ்த்துக்கு நன்றி என் Whatsapp-ல் விஜயமானது! பல்லாயிரம் கோடி ரசிகர்களின் பிகில்கள் அலைகளாய் எழும்பினாலும், அமைதியான கடல் போல் ஆரவாரம் இல்லாத Mr விஜய் வணிகத்தின் உச்சத்தை என்றும் தொடுவார் + தொடர்வார்! என்று பதிவிட்டுள்ளார்
49 நிமிடங்களில்...
பிகில்' போல் வாழ்த்துக்கு நன்றி
என் Whatsapp-ல் விஜயமானது!
பல்லாயிரம் கோடி ரசிகர்களின் பிகில்கள் அலைகளாய் எழும்பினாலும்,அமைதியான கடல் போல் ஆரவாரம் இல்லாத
Mr விஜய் வணிகத்தின் உச்சத்தை
என்றும் தொடுவார்+தொடர்வார்! pic.twitter.com/l1twd6eEpq
— R.Parthiban (@rparthiepan) June 22, 2019