'என் தூக்கம் போய் ரொம்ப நாளாச்சு' - நடிகர் பார்த்திபன் உருக்கம்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Sep 07, 2019 11:02 PM
பயாஸ்கோப் ஃபிலிம் பிரேம்ஸ் தயாரித்து பார்த்திபன் எழுதி இயக்கியிருக்கும் படம் ஒத்த செருப்பு. இந்த படத்துக்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்ய சத்யா இந்த படத்துக்கு பின்னணி இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் விவேக் எழுதி சித் ஸ்ரீராம் பாடிய குளிருதா புள்ள பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் பார்த்திபன் மட்டுமே நடித்துள்ளார்.
ஒத்த செருப்பு படத்துக்கு சிங்கப்பூர் திரைப்பட விழாவில் கலந்துகொண்டு பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதுகுறித்து பார்த்திபனிடம் Behindwoods சார்பாக உரையாடினோம்.
அப்போது பேசிய அவர், கமர்ஷியல் ரீதியாக பெரிய இயக்குநர்கள் இந்த படம் கமர்ஷியல் ரீதியாக நல்லா போகும் என்று சொல்லும் போது உணர்ச்சி பெருக்கால் பேச முடியாமல் போகிறது. இந்த படத்துக்கு வர்த்தக ரீதியான பெரிய ஒத்துழைப்பு இல்லை. இது மனசுக்குள்ள பெரிய ஏக்கத்தையும் வருத்தத்தையும் ஏற்படுத்துது.
இவ்ளோ நல்ல படத்த எடுத்துட்டு அத வெளியிடுறதுக்கு இன்னும் ரூ.2 கோடி கடன் வாங்கணும். இது குழந்தை பிரசவம் இல்ல. யானை பிரசவம். வயிற்றைக் கிழித்து யானை வந்தா எப்படி இருக்கும் அப்படி தான் எனக்கு இருக்கு. இந்த படத்தை தமிழ்நாடு முழுவதும் நானே வெளியிடுகிறேன். என்னுடைய உறக்கம் போய் நீண்ட நாட்களாகிவிட்டது. என்றார்
'என் தூக்கம் போய் ரொம்ப நாளாச்சு' - நடிகர் பார்த்திபன் உருக்கம் வீடியோ