நடிகையுடன் கேம் விளையாடும் காமெடியன்-இயக்குநர் வலைவீசித் தேடுவதாக ஜி.வி.பிரகாஷ் கலாய்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகையுடன் விளையாடிக் கொண்டிருந்த காமெடி நடிகரை இயக்குநர் தேடிய வேடிக்கையான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Director is searching for You- GV Prakash tweeted Sathish as he was busy hanging out with Nikesha Patel

முதன் முறையாக இந்த திரைப்படத்தில் சதீஷ் மற்றும் ஜி.வி.பிரகாஷ் கூட்டணி அமைத்துள்ளனர். இப்படம் தொடர்பாக இருவரும் ட்விட்டர் பக்கங்களில் பகிரும் புகைப்படங்கள், வீடியோக்கள் இருவருக்கும் இடையே நல்ல கெமிஸ்ட்ரி இருப்பதை காட்டுகிறது.

இந்நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஷூட்டிங்கின் இடையே, நடிகை நிக்கிஷா பட்டேலுடன் காமெடி நடிகர் சதீஷ் ஏதோ ட்ரிக் செய்ய சொல்லிக் கொடுக்கும் வீடியோவை சதீஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

இந்த ட்வீட்டிற்கு ரிப்ளை செய்த நடிகர் ஜி.வி.பிரகாஷ், "இங்க உன்ன இயக்குநர் தேடிட்டிருக்காரு..!" என்றார் அதற்கு சதீஷ், "நான் வரேன்னு சொல்லுங்க.." என்றுள்ளார். இருவருக்கும் இடையிலான இந்த ஜாலியான கெமிஸ்ட்ரி நிச்சயம் ரசிகர்களிம் வரவேற்பை பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

‘குப்பத்து ராஜா’, ‘வாட்ச்மேன்’ என ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் அடுத்தடுத்து திரைப்படங்கள் வெளியாகி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. இது தவிர ஜி.வி.பிரகாஷ் தற்போது சசி இயக்கத்தில் சித்தார்த்துடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார். இவர் நடித்துள்ள ‘100% காதல்’ திரைப்படம் வெளியீட்டிற்கு தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.