தளபதி விஜய் - சிம்ரன் நடித்த ‘துள்ளாத மனமும் துள்ளும்’ திரைப்படத்தின் இயக்குநர் எழில் இயக்கத்தில் நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடிக்கவிருக்கும் புதுப்படத்தின் ஷூட்டிங் துவங்கியது.

சமீபத்தில் இப்படத்தின் பூஜை நடைபெற்ற நிலையில், இதன் ஷூட்டிங் பணிகள் தற்போது தொடங்கியுள்ளது. பல மொழிகளில் திரைப்படங்கள் தயாரித்து வரும் ரமேஷ் பி.பிள்ளை வழங்கும் அபிஷேக் ஃபிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.
ஏற்கனவே இயக்குநர் சசி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்-சித்தார்த் நடிக்கும் திரைப்படத்தை இந்நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இதைத் தொடர்ந்து எழில்-ஜி.வி.பிரகாஷ் இணைந்துள்ள திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக ஈஷா ரெபா நடிக்கிறார்.
சி.சத்யா இசையமைக்கும் இப்படத்தின் மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எழில் பார்முலா எப்படியோ அப்படியே தான் இந்த படமும் காமெடி சப்ஜெக்ட்டில் உருவாகவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.