சிங்கிள் பசங்க - ஹிப்ஹாப் தமிழாவின் 'நட்பே துணை'யிலிருந்து வெளியான வீடியோ சாங் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அவ்னி கிரியேஷன்ஸ் சார்பாக சுந்தர்.சி தயாரித்து ஹிப்ஹாப் தமிழா ஆதி, கரு.பழனியப்பன்,  பாண்டியராஜன், ஆர்ஜே விக்னேஷ்காந்த், எருமசாணி விஜய் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் 'நட்பே துணை'.

Sundar C and Hiphop Tamizha's Single Pasanga Song released From Natpe Thunai

ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ள இந்த படத்தை பார்த்திபன் தேசிங்கு இயக்கியுள்ளார். இந்த படம் சமீபத்தில் வெளியாகி திரையரங்களுகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இந்த படத்தில் இருந்து 'சிங்கிள் பசங்க' என்ற பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த பாடலை அறிவு எழுத, காகா பாலச்சந்தர், கானா உலகம் தரணி, அறிவு ஆகியோர் பாடியுள்ளனர்.

சிவகார்த்திகேயன் - நயன்தாரா இணைந்து நடிக்கும் 'மிஸ்டர் லோக்கல்' என்ற படத்துக்கும் ஹிப்ஹாப் தமிழா  இசையமைத்துள்ளார். ராஜேஷ் இயக்கியுள்ள இந்த படத்திலிருந்து டக்குனு டக்குனு என்ற பாடல் சமீபத்தில் வெளியாகியிருந்தது.

சிங்கிள் பசங்க - ஹிப்ஹாப் தமிழாவின் 'நட்பே துணை'யிலிருந்து வெளியான வீடியோ சாங் இதோ வீடியோ