www.garudabazaar.com
iTechUS

குழந்தைகளுடன் ரஜினி & லதா காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய ஐஸ்வர்யா.. நெகிழ்ச்சியான PHOTOS!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பொங்கல் கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Aishwarya Rajinikanth shared Pongal Celebration photos with family

Also Read சிரஞ்சீவி நடிப்பில் 'வேதாளம்' தெலுங்கு ரீமேக்.. பிரம்மாண்ட செட்டில் ஷூட்டிங்.. வைரல் PHOTOS

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மகளும் தமிழ் சினிமாவின் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்,  தனுஷ் நடிப்பில் 3, கௌதம் கார்த்தி நடிப்பில் வை ராஜா வை உள்ளிட்ட திரைப்படங்களை  இயக்கியவர்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்  இயக்கிய முசாபிர் ஆல்பம் சமீபத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த், அடுத்ததாக லால் சலாம் படத்தினை  இயக்க உள்ளார். இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ பாத்திரத்தில் நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் கதாநாயகனாயாக நடிகர் விஷ்ணு விஷால் & விக்ராந்த் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

Aishwarya Rajinikanth shared Pongal Celebration photos with family

சிலநாட்களுக்கு முன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் சேர்ந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். பின்னர் அதே நாளில் கடப்பா மாவட்டத்தில் உள்ள அமீன் பீர் தர்ஹாவிற்கு சென்று இசையமைப்பாளர் ரஹ்மான், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இறை வழிபாடு செய்தனர்.

Aishwarya Rajinikanth shared Pongal Celebration photos with family

அதேபோல் சில நாட்களுக்கு முன் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், பஞ்சபூத தலங்களில் நெருப்பு தலமான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு சென்று ஐஸ்வர்யா ராய் சாமி தரிசனம் செய்தார். 

Aishwarya Rajinikanth shared Pongal Celebration photos with family

இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனது குடும்பத்துடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Aishwarya Rajinikanth shared Pongal Celebration photos with family

சமையலறையில் பொங்கல் பானையை வைத்து வழிபாடு செய்யும் தருணமும், பசு மாட்டிற்கு அகத்திக்கீரை கொடுக்கும் புகைப்படமும், குழந்தைகள் யாத்ரா, லிங்கா உடன் இணைந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் & லதா ரஜினிகாந்த் காலில் விழுந்து தானும் ஆசிர்வாதம் வாங்கும் புகைப்படத்தையும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பகிர்ந்துள்ளார்.

Also Read | BREAKING: அஜித் & விக்னேஷ் சிவன் இணையும் 'AK 62'.. ஷூட்டிங் இந்த ஊர்லயா? எப்போ? முழு தகவல்

தொடர்புடைய இணைப்புகள்

Aishwarya Rajinikanth shared Pongal Celebration photos with family

People looking for online information on Aishwarya Rajinikanth, Aishwarya Rajinikanth Pongal Celebration Photos will find this news story useful.