www.garudabazaar.com

"மகா சிவராத்திரி".. ஈஷா யோகா மையத்தில் தமன்னா.. பரவச நடனம் ஆடிய நடிகை.. வீடியோ!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மகா சிவராத்திரியை முன்னிட்டு ஆண்டு தோறும் நாடு முழுவதும் உள்ள பல இடங்களில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டும் அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் தொடங்கி ஏராளமானோர் இந்த சிவராத்திரி விழாவில் வழிபாடு நடத்தி இருந்தனர்.

Tamannaah dance at isha foundation mahashivratri 2023

Images are subject to © copyright to their respective owners.

Also Read | திருமணத்துக்கு தயங்கியபடி அழைத்த படவா கோபி .. ஆனா மயில்சாமி வந்து செஞ்ச நெகிழ்ச்சி விஷயம்...

அந்த வகையில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரியை முன்னிட்டு ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மையத்திலும் சிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

மேலும் ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவிற்கு அரசியல் தலைவர்கள் தொடங்கி சினிமா பிரபலங்கள் வரை பங்கேற்பது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் ஜனாதிபதி திரௌபதி முர்மு கலந்து கொண்டார். இது தவிர சினிமா பிரபலங்கள் மற்றும் இசைக்கலைஞர்கள் என பலரும் இந்த சிவராத்திரி விழாவில் பங்கெடுத்திருந்தனர். முன்னதாக நடிகைகள், மிருணாளினி ரவி, மேகா ஆகாஷ், மம்தா மோகன்தாஸ் உள்ளிட்டோர் ஈஷா யோகா மையத்திற்கு வருகை புரிந்திருந்தனர்.

Tamannaah dance at isha foundation mahashivratri 2023

Images are subject to © copyright to their respective owners.

இந்த நிலையில் பிரபல நடிகை தமன்னாவும், ஈஷா மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொண்டு இது தொடர்பான வீடியோக்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார். ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழாவிற்கு ஈஷா யோகா மையத்திற்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ள தமன்னா, இந்த முறையும் பங்கேற்று ஜக்கி வாசுதேவ் உள்ளிட்ட பலருடன் நடனமாடிய வீடியோ காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Also Read | Mayilsamy : "பிறரை கெடுத்து அவர் வாழல" - மயில்சாமி குறித்து சிங்கமுத்து உருக்கம்.

தொடர்புடைய இணைப்புகள்

Tamannaah dance at isha foundation mahashivratri 2023

People looking for online information on Isha foundation, Mahashivratri 2023, Tamannaah Bhatia, Tamannaah dance at isha foundation will find this news story useful.