www.garudabazaar.com

AR ரஹ்மான், மகன் அமீனுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. வைரல் Pic!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்திய அளவில் மட்டுமில்லாமல், இசை அமைப்பாளராக சர்வதேச அரங்கிலும் அதிக கவனம் ஈர்த்து வருபவர் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான்.

Aishwarya rajinikanth birthday wish ar rahman and son ameen pic viral

Also Read | "அந்த வார்த்தையை Avoid பண்ணு மச்சான், அசிங்கப்படுத்துற மாதிரி இருக்கு".. அசிம் செயலால் ADK ஆவேசம்

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு மணிரத்னம் இயக்கத்தில், அரவிந்த் சாமி மற்றும் மதுபாலா நடிப்பில் வெளியாகி இருந்த 'ரோஜா' திரைப்படம் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகம் ஆனவர் ஏ.ஆர். ரஹ்மான். முதல் படத்திலேயே சிறந்த இசை அமைப்பாளருக்கான தேசிய விருது வென்ற ஏ.ஆர். ரஹ்மான், அதன் பிறகு தொட்டது எல்லாம் தூள் என்ற கணக்கில் தான் சென்று கொண்டிருக்கிறது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அடுத்தடுத்து வேகமாக நகர்ந்து சென்ற ஏ.ஆர். ரஹ்மான், ஹாலிவுட் வரைக்கும் சென்று ஆஸ்கர் விருதினையும் வென்று இந்தியாவிற்கே பெருமை சேர்த்திருந்தார்.

Aishwarya rajinikanth birthday wish ar rahman and son ameen pic viral

இசை அமைப்பாளராக அறிமுகமாகி 30 ஆண்டுகள் ஆன போதும் தொடர்ந்து தனது இசையால் ரசிகர்களை கட்டி போட்டும் வருகிறார். சமீபத்தில் கூட இரவின் நிழல், பொன்னியின் செல்வன், வெந்து தணிந்தது காடு என ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் உருவாகி இருந்த படங்களின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை, பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்திருந்தது.

இதற்கு அடுத்தபடியாக, பொன்னியின் செல்வன் 2, பத்து தல, மாமன்னன், லால் சலாம், அயலான், ஆடு ஜீவிதம், KH 234 உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களிலும் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

Aishwarya rajinikanth birthday wish ar rahman and son ameen pic viral

இசை அமைப்பாளர் என்பதையும் தாண்டி, '99 சாங்ஸ்' என்னும் திரைப்படம் மூலம் எழுத்தாளராகவும் அறிமுகமாகி இருந்தார் ஏ.ஆர். ரஹ்மான். இதனைத் தொடர்ந்து, இசை, கதை என்பதைத் தாண்டி, இயக்குனர் அவதாரத்தையும் எடுத்திருந்தார் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான். 'லி மஸ்க்' (Le Musk) என்னும் 36 நிமிடம் ஓடக் கூடிய திரைப்படம் ஒன்றை ரஹ்மான் இயக்கி உள்ளார்.

இப்படி பன்முகத் திறமை கொண்ட ஏ.ஆர். ரஹ்மான், ஜனவரி 06 ஆம் தேதியான இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். உலகெங்கிலுமுள்ள பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் ஏ.ஆர். ரஹ்மானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மகளும், இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ஏ.ஆர். ரஹ்மான் பிறந்தநாளை முன்னிட்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படம், இணையத்தில் வைரலாகி வருகிறது.

Aishwarya rajinikanth birthday wish ar rahman and son ameen pic viral

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் அடுத்ததாக லால் சலாம் திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் சிறப்புத் தோற்றத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார். இந்த படத்தின் பூஜையும் சமீபத்தில் நடைபெற்றிருந்தது. லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார். முன்னதாக, ரஹ்மானுடன் லால் சலாம் படத்திற்கான வேலைகளில் இருக்கும் போது அது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பகிர்ந்திருந்தார்.

அப்படி ஒரு சூழலில் தற்போது ஏ. ஆர். ரஹ்மான் பிறந்தநாளை முன்னிட்டு, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் அவரது மகன் அமீன் ஆகியோருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். கேப்ஷனிலும் பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறி நெகிழ்ச்சியாக சில கருத்துக்களையும் அவர் தெரிவித்துள்ளார். அதே போல, ஏ.ஆர். ரஹ்மான் மகனான அமீனுக்கும் இன்று தான் பிறந்த நாள் என்ற சூழலில் அவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

Also Read | "என்கிட்ட இந்த பாச்சா எல்லாம் பலிக்காது".. விக்ரமன் முடிவால் அசிம் அதிருப்தி!!.. பரபர Bigg Boss

தொடர்புடைய இணைப்புகள்

Aishwarya rajinikanth birthday wish ar rahman and son ameen pic viral

People looking for online information on Aishwarya Rajinikanth, Aishwarya Rajinikanth birthday wish to AR Rahman, AR Ameen, AR Rahman will find this news story useful.