இந்த படத்தின் பின்னணி இசை அமைக்கும் வீடியோவை வெளியிட்ட ரஹ்மான்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஏ.ஆர். ரஹ்மான் தமிழில் அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தார உள்ளிட்டோர் நடித்து வரும் 'தளபதி 63' படத்துக்கு இசையமைத்து வருகிறார். அதனைத் தொடர்ந்து ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் சயின்ஸ் பிக்சன் படத்துக்கும் அவர் இசையமைக்கிறார்.

AR Rahman Scoring 99Songs movie scenes

இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் தயாரித்து, கதை எழுதி, இசையமைத்திருக்கும் படம் '99 சாங்க்ஸ்'. இந்த படத்தில் ஈஹான் பட், எடில்சி வர்காஸ் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் பின்னணி இசையமைக்கும் வீடியோவை ரஹ்மான் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதில் '99 சாங்க்ஸ்' படத்தின் காட்சிகள் ஒரு திரையில் ஓடிக்கொண்டிருக்கிறது. அதன் முன் உள்ள ஒரு சிஸ்டமில் ஒரு இசை ஒலிக்கிறது.