தனுஷின் அடுத்த ப்ளான் - கர்ணனில் இருந்து கங்கை.! பாலிவுட் பட ஷூட் என்ன ஆனது.?
முகப்பு > சினிமா செய்திகள்தனுஷ் நடிக்கும் ஹிந்தி படத்தின் ஷூட்டிங் குறித்த தகவல் தெரிய வந்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் தனுஷ். தமிழ் மட்டுமின்றி ஹிந்தி படங்களிலும் இவர் நடித்துள்ளார். இவர் தற்போது ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் அத்ரங்கிரே படத்தில் நடிக்கிறார். இத்திரைப்படத்தில் தனுஷுடன் சேர்ந்து அக்ஷய் குமார், சாரா அலிகான் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.
இந்நிலையில் அத்ரங்கிரே படம் குறித்து தகவல் தெரிய வந்துள்ளது. தனுஷ் நடிக்கும் இப்படத்தின் ஷூட்டிங் வாரணாசியில் நடைபெறவுள்ளது. இன்று படத்தின் பூஜை போடப்பட்டு, தனுஷ் மற்றும் சாரா அலிகான் நடிக்கும் முக்கியமான காட்சிகள் வாரணாசியில் படமாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மாரி செல்வராஜின் கர்ணன் படத்தையடுத்து, தனுஷ் இத்திரைப்படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. அத்ரங்கிரே அடுத்த வருடம் வேலன்டைன்ஸ் ட்ரீட்டாக வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
The beginning of a new journey! @AanandLRai's directorial #AtrangiRe starring @AkshayKumar,@DhanushKRaja & #SaraAliKhan goes on floors today! Presented by @itsbhushankumar's @Tseries @cypplofficial & #CapeOfGoodFilms, the film is written by #HimanshuSharma & an @arrahman musical. pic.twitter.com/chyTIbakoj
— TSeries (@TSeries) March 5, 2020