தனுஷோடு முதல் படத்தில் எடுத்துக்கொண்ட Throwback போட்டோவை பகிர்ந்த பிரபல நடிகை!
முகப்பு > சினிமா செய்திகள்’பட்டாஸ்’ படத்துக்கு பிறகு தனுஷ் கார்த்திக் சுப்புராஜின் 'ஜகமே தந்திரம்' படத்தில் நடித்தார். இதன் பிறகு மாரி செல்வராஜ் இயக்கிய 'கர்ணன்' படத்தில் நடித்து வந்தார். ஆனால், கொரோனா உயிர் கொல்லி நோய் பரவி வருவதால் தற்காலிகமாக ஷூட்டிங் ஒத்திப் போடப் பட்டிருக்கிறது.
இந்நிலையில் தனுஷின் ஆரம்ப கால சினிமா வாழ்வை நினைவூட்டும்படியான புகைப்படத்தை நடிகை ஷெரின் பகிர்ந்துள்ளார். தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா தான் எழுதிய நாவல் ஒன்றை அடிப்படையாகக் கொண்டு ’துள்ளுவதோ இளமை’ திரைப்படத்தை உருவாக்கினார். படத்துக்கு அவர் மகன் செல்வராகவன் திரைக்கதை எழுதியிருந்தார். இது வெளியானபோது இளம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஷெரின் நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து விசில், உற்சாகம், நண்பண்டா ஆகிய தமிழ் படங்களிலும் பல தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களிலும் நடித்த அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டுள்ளார்.
சமீபகாலமாக ஷெரின் இன்ஸ்டாக்ராமில் ஆக்டிவாக இயங்கி வருகிறார். இந்நிலையில் துள்ளுவதோ இளமை படத்தில் தனுஷுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை பகிர்ந்துகொண்ட அவர் அதற்கு ‘மதர் ஆஃப் த்ரோ பேக்’ என்று கேப்ஷன் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்துக்கு ரசிகர்கள் லைக் மழையை கொட்டி வருகின்றனர்.