''இப்படித்தான் என் ஆளுகிட்ட லவ் சொல்லுவேன்'' - பிக்பாஸ் 3 நடிகை வெளியிட்ட வீடியோ வைரல்
முகப்பு > சினிமா செய்திகள்நடிகை ஷெரின் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானார். பிக்பாஸ் வீட்டிற்குள் அவரது செயல்பாடுகள் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு நன்மதிப்பை பெற்றுத் தந்தது.

இதனைத் தொடர்ந்து அவரது சமூக வலைதளப்பதிவுகள் ரசிகர்களிடையே தொடர்ந்து வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் சமீபகாலமாக அவரது டிக் டாக் வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ''இப்படித்தான் ஆளுகிட்ட நான் லவ் சொல்லுவேன்'' என்று பதிவிட்டுள்ள அந்த பதிவில், ''அன்பே நீ ஒரு இட்லி, நான் உனக்கு சட்னி , நீ பொங்கல், உங்கள் அப்பா எனக்கு அங்கிள். நீ ஒரு பரோட்டோ, இப்பவே கல்யாணம் பண்ண வரட்டா '' என்று பேசி டிக்டாக் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.
Tags : Bigg Boss 3, Vijay tv, Sherin