கீர்த்தி சுரேஷ் ஸ்டார் ஹீரோவுக்கு பிறந்தநாள் வாழ்த்தாக பகிர்ந்த வீடியோ - ஃபர்ஸ்ட் லும் இதோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கீர்த்தி சுரேஷ் தமிழில் விக்ரம் பிரபுவுடன் நடித்த ’இது என்ன மாயம்’ படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

தொடர்ந்து தொடரி, சண்டக்கோழி – 2, ரெமோ மற்றும் பல தெலுங்கு படங்களில் நடித்த அவருக்கு, நடிக்கை சாவித்ரியின் வாழ்வை மையப்படுத்தி உருவான ‘மகாநதி’ திரைப்படம் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றுத்தந்தது. இதைத் தொடர்ந்து இவர் பெண்குயின், மிஸ் இந்தியா உட்பட பல்வேறு படங்களில் பிசியாக இருந்தார்.

ஆனால் தற்போது கொரோனா வைரஸ் பரவலால் படப்பிடிப்புகள் ஒத்திவைக்கப் பட்டிருப்பதால் அவர் படங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து தெலுங்கில் அவர் ஹீரோ நிதினோடு நடித்த ’ரங் தே’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

இந்த வீடியோவில் நாயான் நாயகியின் பெயர் அர்ஜுன், அனு என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. வெங்கட் அட்லூரி இயக்கும் இந்த படத்துக்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய, டிஎஸ்பி இசையமைக்கிறார். இந்த போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் மோகன்லாலுடன் நடித்த மரக்கர், ரஜினியுடன் நடித்த ‘அண்ணாத்த’ படங்களில் இருந்து அப்டேட்டை கேட்க ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

கீர்த்தி சுரேஷ் ஸ்டார் ஹீரோவுக்கு பிறந்தநாள் வாழ்த்தாக பகிர்ந்த வீடியோ - ஃபர்ஸ்ட் லும் இதோ! வீடியோ

Entertainment sub editor