ஜகமே தந்திரம் : கொக்கி குமார், மாரி, அன்பு வரிசையில் இதுவும் இருக்கும்..! தனுஷ் சொன்ன அப்டேட்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனுஷ் நடிக்கும் ஜகமே தந்திரம் படத்தில் இருந்து செம மாஸான தகவல் தற்போது தெரிய வந்துள்ளது.

தனுஷின் ஜகமே தந்திரம் சூப்பர் தகவல் | Dhanush Karthik Subbaraj's Jagame Thandiram Movie Character Name Details

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். கார்த்திக் சுப்புராஜ் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஷ்வர்யா லக்ஷ்மி, கலையரசன், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இத்திரைப்படத்தை சஷிகாந்த் தயாரிக்கிறார்.

இந்நிலையில் ஜகமே தந்திரம் படத்தில் இருந்து முக்கியமான தகவலை தனுஷ் தெரிவித்துள்ளார். இத்திரைப்படத்தில் தனது கதாபாத்திரத்தின் பெயர் சுருளி என அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் ஒரு புதிய போஸ்டரையும் அவர் வெளியிட்டுள்ளார். கேங்ஸ்டர் ஜானரில் உருவாகியிருக்கும் இத்திரைப்படம் மே 1 அன்று வெளியாவதாக படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தனுஷின் கேங்ஸ்டர் கதாபாத்திரங்களான கொக்கி குமார், மாரி, அன்பு வரிசையில் சுருளியும் இருக்கும் என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது தனுஷின் பதிவு. 

Entertainment sub editor