வெள்ளை வேஷ்டி, சட்டை... 'மாஸ்' காட்டிய தனுஷ்.. புதுப்பேட்டை 2 உறுதியானதும் தனுஷ் செய்த முதல் வேலை!
முகப்பு > சினிமா செய்திகள்தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடம் பிடித்து சாதித்து நிற்பவர் நடிகர் தனுஷ். இவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வந்த 'ஜகமே தந்திரம்' படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், படம் வரும் மே மாதம் ரிலீஸ் ஆக உள்ளது. மேலும் சமீபத்தில் வெளியான படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே வேற லெவல் வரவேற்பைப் பெற்றது.

இந்த படத்திற்கு அடுத்தாக தனுஷ் 'பரியேறும் பெருமாள்' பட இயக்குனர் மாரி செலவராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார் . இந்த படமும் அசுரனைப் போலவே ஒரு சமூக பிரச்சனையைப் பற்றி பேசுகிறது. மேலும் இது ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகிறது.
'கர்ணன்' என்று பெயரிடப்பட்டுள்ள அந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக்கில் தனுஷ் கையில் கத்தியுடன் நிற்க, ரத்தம் தெறிக்க ஒரு போஸ்டர் வெளியானது.அசுரனை தயாரித்த கலைப்புலி.S.தாணு தான் இந்த படத்தையும் தயாரிக்கிறார். மலையாள நடிகர் லால், ராஜீஷா விஜயன், யோகிபாபு உட்பட பலர் இதில் நடிக்கின்றனர்.
இந்நிலையில் தனுஷ் இன்று(09.03.2020) திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார். வெள்ளை வேஷ்டி, சட்டையில் பவ்யமாக அவர் கோயிலில் வலம் வரும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. ஏனோ ஒரு ஜாடையில் பார்க்கும் போது தனது மாமனார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை பார்ப்பதைப் போலவே இருக்கிறார். இப்போ சமூக வலைத்தளங்களில் இந்த போட்டோக்கள் தான் வைரலாக பரவி வருகிறது.