நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக் கூறிய நடிகர் ரஜினிகாந்திற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் பல்வேறு கட்டமாக நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில் மொத்தமுள்ள 542 தொகுதிகளில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி சுமார் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் தனித்து வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து இரண்டாவது முறையாக இந்திய பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்கவிருக்கிறார்.
மக்களவை தேர்தல் வெற்றிக்கு உலக தலைவர்கள், பல அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள் பிரதமர் மோடிக்கு தங்களது வாழ்த்துக்களை ட்விட்டரில் தெரிவித்தனர். இந்நிலையில், மோடியின் வெற்றிக்கு நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார். அவரது ட்வீட்டில், ‘மதிப்பிற்குரிய பிரதமர் நரேந்திர மோடிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். மக்களவை தேர்தலில் நீங்கள் சாதித்துவிட்டீர்கள்; கடவுள் ஆசிர்வதிக்கட்டும்’ என பதிவிட்டிருந்தார்.
நடிகர் ரஜினிகாந்தின் வாழ்த்திற்கு நன்றி கூறிய பிரதமர் மோடி, ‘டியர் ரஜினிகாந்த் ஜி..மிக்க நன்றி. இது இந்திய மக்களின் ஆசிர்வாதம். அவர்கள் இல்லாமல் இது சாத்தியமில்லை’ என தெரிவித்துள்ளார்.
Dear @rajinikanth Ji, thanks a lot. It is the people of India who blessed us and no stone will be left unturned to fulfil their aspirations. https://t.co/XctMMroYq5
— Narendra Modi (@narendramodi) May 23, 2019