ஜனநாயகம் தழைக்க எதிர்க்கட்சிகள் திறம்பட செயல்பட வேண்டும் என நடிகர் விவேக் ஓபராய் தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. இரண்டாம் முறையாக பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி அமைக்கிறார்.
காங்கிரஸ் கூட்டணி நூறு இடங்களில் கூட வெற்றி பெறவில்லை. மற்ற மாநில கட்சிகள் 105 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. தேர்தல் நடைபெற்ற 542 தொகுதிகளில் 340க்கும் அதிகமான தொகுதிகளை பாஜக கூட்டணி தான் கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய், எதிர்க்கட்சிகளுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதாவது, " நரேந்திர மோடிக்கு எதிராக ஒன்றிணைந்த அனைத்து அரசியல்வாதிகளுக்கும் எனது தாழ்மையான வேண்டுகோள். மோடியை வெறுப்பதற்கு சிறிது நேரமும், தேசத்தை நேசிப்பதற்கு அதிக நேரமும் செலவிடுங்கள். ஜனநாயகம் தழைக்க எதிர்க்கட்சிகள் திறம்பட செயல்பட வேண்டும் ஜெய்ஹிந்த்.", என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
To all the politicians who were united by their hate against @narendramodi. A humble request to you all - please spend less time hating #Modi and more time loving #Bharat🇮🇳. India needs a sensible opposition for a healthy democracy. Jai Hind 🇮🇳 #ElectionResults2019 #ModiPhirSe pic.twitter.com/KWthkLltIH
— Vivek Anand Oberoi (@vivekoberoi) May 23, 2019