"வெற்றி தலித்துகளுக்கு அவ்வளவு சுலபம் இல்லை" - ரஜினி பட இயக்குனரின் ட்விட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நாடு முழுவதும் கடந்த மாதத்திலிருந்து நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்து முடிந்தது.

Pa.Ranjith Tweet About Parliament Election Result in Chidambaram

இதில் பெரும்பான்மையான தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் ஆட்சிக்கு வருகிறது மோடியின் பாஜக கட்சி. தமிழகத்தில் எதிர்கட்சியான திமுக 37 தொகுதிகளை பெற்றுள்ளது. இதில் திமுகவின் கூட்டணியில் அங்கம் வகித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மிகுந்த இழுபறிக்கு பிறகு வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

மேலும் இவரது இந்த வெற்றி தான் தற்சமயம் சமூக வலைத்தளம் எங்கிலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ரஜினியின் கபாலி, காலா படங்களை இயக்கிய பா.ரஞ்சித், வெற்றி தலித்துகளுக்கு அவ்வளவு சுலபம் இல்லை என தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்

Tags : Pa Ranjith