'பெருமையுடன் தோற்கிறோம்' - தேர்தல் வெற்றி குறித்து பிக் பாஸ் பிரபலம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்துக் கொண்ட நடிகை காயத்ரி ரகுராம், நாடாளுமன்ற தேர்தல் குறித்து சில ட்வீட்களை பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலின், வாக்கு எண்ணிக்கை இன்று (மே.23) ஒரே கட்டமாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பெரும்பாலான தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ள நிலையில், தமிழகத்தில் பாஜக பின்னடைவை சந்தித்துள்ளது.

கோயம்புத்தூர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய 2 நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக-பாஜக கூட்டணி வேட்பாளர்களுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இது குறித்து நடிகையும், நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் சில ட்வீட்களை பகிர்ந்துள்ளார். அதில் ‘தமிழத்தில் வெற்றி பெற பாஜக சிறப்பாக பணியாற்றியதை மீறி பின்னடைவு ஏற்பட்டது வருத்தம். தமிழகத்தில் பெருமையுடன் தோற்கிறோம்’ என ட்வீட் செய்துள்ளார்.

மேலும், ‘தமிழகத்தில் பாஜகவை நாளுக்கு நாள் வளர்த்து வருகிறோம். 2021-ல் நிரூபிப்போம். யூகித்தபடியே திமுக வெற்றி முகத்தில் இருக்கிறது. சிறப்பாக செயல்படுவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்’ என ட்வீட் செய்துள்ளார்.