“தமிழ் சினிமா விளம்பரங்களுக்கு என்னை அணுகலாம்” - சிஎஸ்கே வீரர் அறிவிப்பு
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Aug 03, 2019 12:04 AM
ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், தமிழில் ட்வீட் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். ஐபிஎல் போட்டி மட்டுமல்லாது, தமிழ் பண்டிகைகள் காலங்களிலும், தமிழ்நாடு தொடர்பான விஷயங்களில் அக்கறையும் தமிழில் ட்வீட் செய்யும் ஹர்பஜனுக்கென்று தனியாக ரசிகக்ரள் உள்ளனர்.

அட்மின் வைத்து தமிழ் வளர்க்கும் ஹர்பஜன் சிங், தமிழ் சினிமாவுக்கு விளம்பரம் செய்ய திட்டமிட்டுள்ளார். அது தொடர்பான அறிவிப்பு ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் ஹர்பஜன் சிங் பதிவிட்டுள்ளார்.
அதில், ‘என் மூலமாக தமிழ் சினிமா விளம்பரங்கள், ஒப்பந்தங்கள்,வியாபாரம்,சமூக வலைதள விளம்பரங்கள் செய்ய விரும்பினால் தொடர்புக்கு அணுகவும்- என் அன்பு தம்பி சின்னாளப்பட்டி சரவணன் பாண்டியன்’ என குறிப்பிட்டுள்ளார்.
ஆக, இனி தமிழ் சினிமாவில் படங்களை புரொமோஷனுக்கு ஹர்பஜன் சிங் உதவுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
என் மூலமாக தமிழ் சினிமா விளம்பரங்கள், ஒப்பந்தங்கள்,வியாபாரம்,சமூக வலைதள விளம்பரங்கள் செய்ய விரும்பினால்
தொடர்புக்கு அணுகவும்- என் அன்பு தம்பி
சின்னாளப்பட்டி சரவணன் பாண்டியன்
Contact : @ImSaravanan_P
Num: 9789294947
— Harbhajan Turbanator (@harbhajan_singh) August 2, 2019