www.garudabazaar.com
iTechUS

"இனிமே சிவாங்கி செஃப் போல?".. புது கெட்அப்பில் வந்த கோமாளி?.. குஷியான குக் வித் கோமாளி செட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக் பாஸ் நிகழ்ச்சியை போலவே விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ஹிட்டடித்த ரியாலிட்டி ஷோ என்றால் நிச்சயம் குக் வித் கோமாளியை சொல்லலாம்.

Cook with comali season 4 new trailer with contestants

                                              Image Credit : vijay television

Also Read | திடிரென மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற TTF வாசன்.. அவரே சொன்ன நோய்க்காரணம்.. VIDEO

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்த நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி ஷோ பார்க்கப்படும் நிலையில், இதன் சிறப்பம்சமாக இருப்பதே சீரியஸான விஷயமாக இருக்கும் சமையலை மிகவும் வித்தியாசமாக பொழுதுபோக்கு மற்றும் விறுவிறுப்பு அம்சங்களுடன் காண்பிப்பது தான்.

சமையல் என்ற சீரியஸான போட்டி நடைபெறும் போது அதில் கோமாளிகளாக சிலர் போட்டியாளர்களுடன் ஜோடி சேர்ந்து சமைக்கவும் செய்கின்றனர். சமைக்க தெரிந்த போட்டியாளர் மற்றும் சமைக்க தெரியாத கோமாளி என இரண்டு பேரும் சேரும் போதே அங்கே கலகலப்பான சம்பவங்களுக்கு மட்டும் தான் இடம் உள்ளது.

Cook with comali season 4 new trailer with contestants

Image Credit : vijay television

இதற்கு நடுவே, குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நடுவர்காளாக பிரபல செஃப்கள் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் ஆகியோர் மிகவும் அரட்டை அடித்து அனைவரையும் கலாய்த்து கொண்டே இருப்பதால் நிகழ்ச்சி இன்னும் சுவாரஸ்யமாகவும் செல்கிறது. இதுவரை 3 சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில், அனைத்துமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Cook with comali season 4 new trailer with contestants

Image Credit : vijay television

முன்னதாக அஸ்வின், புகழ், பவித்ரா, சிவாங்கி, குரேஷி, சூப்பர் சிங்கர் பரத், KPY சரத் , மணிமேகலை, சுனிதா, KPY பாலா உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களை கவர்ந்தனர். இந்நிகழ்ச்சியின் முதல் சீசனில் வனிதா வெற்றி பெற்றார். 2வது சீசனில் கனி வெற்றி பெற்றார். 3வது சீசனில் ரோஷினி ஹரிபிரியன், வித்யூலேகா, ஸ்ருதிகா மற்றும் பலர் சமையல் செய்பவர்களாக கலந்துகொண்டனர். இவர்களுள் ஸ்ருதிகா வெற்றி பெற்றார்.

Cook with comali season 4 new trailer with contestants

Image Credit : vijay television

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் 4 ஆவது சீசன் ஆரம்பமாக உள்ளது. முன்னதாக, இந்த நிகழ்ச்சியின் ட்ரைலர் வெளியாகி இருந்த நிலையில், கோமாளிகள் மற்றும் நடுவர்களான தாமு மற்றும் வெங்கடேஷ் பட் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். மேலும் ஜிபி முத்து, ஓட்டேரி சிவா, சிங்கப்பூர் தீபன் உள்ளிட்ட பலரும் புதிய கோமாளிகளாகவும் களமிறங்குகின்றனர்.

இதனைத் தொடர்ந்து தற்போது இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொள்பவர்கள் பற்றிய ப்ரோமோ வெளியாகி உள்ளது.

Cook with comali season 4 new trailer with contestants

Image Credit : vijay television

அதன்படி, பாக்கியலட்சுமி சீரியல் புகழ் VJ விஷால், நடிகைகள் விசித்ரா,ஷெரின், ஸ்ருஷ்டி டாங்கே, வலிமை படத்தில் அஜித் சகோதரராக நடித்த ராஜ் ஐயப்பா, நடிகர் மற்றும் இயக்குனர் கிஷோர், நடிகர் காளையன் உள்ளிட்டோர் போட்டியாளர்களாக குக் வித் கோமாளி சீசன் நிகழ்ச்சியில் களமிறங்குவதாக தெரிகிறது. இதே போல, பிரெஞ்சு நடிகை Andreanne Nouyrigat-ம் போட்டியாளராக களமிறங்குவதாக தெரிகிறது. இவர் ரஜினி முருகன் படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர். அதே போல, கோமாளிகள் குறித்த ப்ரோமோவில் முந்தைய சீசன்களில் பலரின் ஃபேவரைட்டாக இருந்த கோமாளி சிவாங்கி இடம்பெறவில்லை.

Cook with comali season 4 new trailer with contestants

Image Credit : vijay television

அப்படி இருக்கையில்; செஃப் கெட்டப்பில் அவர் ப்ரோமோவில் வருகை தருவதால், இந்த சீசனில் அவர் போட்டியாளராக களமிறங்க போகிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ப்ரோமோவிலேயே பல சுவாரஸ்யங்கள் இடம்பெற்றுள்ளதால் முழு எபிசோடை பார்க்கவும் பார்வையாளர்கள் ஆவலாக உள்ளனர்.

Also Read | "நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன்".. Bigg Boss- க்கு பின் அசிம் வெளியிட்ட முதல் வீடியோ!!..

தொடர்புடைய இணைப்புகள்

Cook with comali season 4 new trailer with contestants

People looking for online information on Cook with comali, Cook With Comali Season 4, CWC4, CWC4 contestants, Vijay tv will find this news story useful.