பிரபல சீரியல் & சினிமா இயக்குனர் தாய் செல்வம் திடீர் மரணம்.. சோகத்தில் திரையுலகினர்
முகப்பு > சினிமா செய்திகள்பிரபல சீரியல் & சினிமா இயக்குனர் தாய் செல்வம் திடீர் மரணம் அடைந்துள்ளார்.

Also Read | ஜிகர்தண்டா டபுள் X பட ஷூட்டிங்.. நடிகர் ராகவா லாரன்ஸை காண குவிந்த ரசிகர்கள்! VIDEO
கடந்த 2009-ம் ஆண்டு நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியான ‘நியூட்டனின் 3-ம் விதி’ படத்தை இயக்கியவர் தாய் செல்வம். இந்த படத்திற்கு முன் காத்து கருப்பு என்ற சீரியலை இயக்கி இருந்தார்.
பின்னர் பல சின்னத்திரை சீரியல்களையும் தாய் செல்வம் இயக்கினார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான, காத்து கருப்பு, மௌனராகம் சீசன்-1, நாம் இருவர் நமக்கு இருவர், தாயுமானவன், கல்யாணம் முதல் காதல் வரை, பாவம் கணேசன், தற்போது ஒளிபரப்பாகும் ஈரமான ரோஜாவே சீசன் 2 உள்ளிட்ட சின்னத்திரை சீரியல்களை இயக்கியவர்.
இந்நிலையில் தாய் செல்வம் இன்று காலமானார். இவருக்கு திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். மேலும் விஜய் டிவி சேனல் சார்பாக அவர்களது டிவிட்டர் பக்கத்தில் "உங்களது படைப்புகள் என்றும் எங்கள் மனதில்" என பதிவிட்டு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
💔 உங்களது படைப்புகள் என்றும் எங்கள் மனதில்..#RIPDirectorThaiSelvam#KaathuKaruppu #Thaayumaanavan #KalyanamMudhalKaadhalVarai #MounaRaagam Season 1#NaamIruvarNamakkuIruvar#PaavamGanesan#EeramaanaRojaave Season 2 pic.twitter.com/CYFDVCHnVK
— Vijay Television (@vijaytelevision) December 15, 2022
Also Read | நிஜ சம்பவத்தை மையமாக வைத்து மாளவிகா மோகனன் நடிக்கும் ROMANTIC படம்.. ரசிகர்களை கவரும் போஸ்டர்!