www.garudabazaar.com
iTechUS

திடிரென மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற TTF வாசன்.. அவரே சொன்ன நோய்க்காரணம்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல யூடியூபர் வாசன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.

TTF Vasan admitted in hospital for treatment and discharge

Also Read | மகள் பிறந்தாளை அரசு பள்ளி குழந்தைகளுடன் கொண்டாடிய சினேகா & பிரசன்னா! நெகிழ்ச்சியான வீடியோ

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் TTF வாசன். தனது யூடியூப் பக்கத்தில் விலை உயர்ந்த தனது பைக்கில் நீண்ட தூரம் பயணம் செய்யும் தொடர்பான வீடியோக்களை வெளியிட்டு வருவதால், பைக்கில் பயணம் செய்ய விரும்பும் பலரும் இவரை பின்பற்றி வருகின்றனர்.

சமீபத்தில் தனது ரசிகர்களை சந்தித்த வாசன் வீடியோக்களும் புகைப்படங்களும் இணையதளத்தில் பரவி வைரலாகின.  டிடிஎஃப் வாசனுக்கு லட்சக்கணக்கான ஃபாலோயர்கள் சமூக வலைத்தளங்களில் உள்ளனர்.

TTF Vasan admitted in hospital for treatment and discharge

அண்மைக்காலமாக  டிடிஎஃப் வாசன் 2k கிட்ஸ்களின் பேராதரவுடன் ட்ரெண்ட் ஆகி வருகிறார். ரசிகர்கள் மத்தியில் அதிக பிரபலமாக இருக்கும் TTF வாசன்,  சில வழக்குகளில் சிக்கி இருந்தார். இருப்பினும் தற்போது பைக்குகளில் பயணம் செய்து வீடியோ வெளியிட்டு வருகிறார்.

TTF Vasan admitted in hospital for treatment and discharge

சமீபத்தில் வாசன், தனது முதுகில்  ரசிகர்களின் முகங்களை பச்சைக்குத்தும் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகின. ரசிகர்களின் முகத்தை ஒரே அமர்வில் பச்சை குத்த 27 மணி நேரம் 24 நிமிடங்கள் ஆனதாக வாசன் கூறியிருந்தார். இதனை பாராட்டி கலாம் உலக சாதனை நிறுவனம் பாராட்டி உலகசாதனை சான்றிதழ் வழங்கியது.

TTF Vasan admitted in hospital for treatment and discharge

மேலும் TTF வாசன் Pit Shop ஒன்றையும் துவங்கி உள்ளார். இந்நிலையில் வாசன் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் தானும் தனது நண்பர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறியுள்ளார். மேலும் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து பேசியுள்ளார். உடலில் ஏற்பட்ட தாழ்நிலை ரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் வாசன் தெரிவித்துள்ளார். சிகிச்சை முடிந்ததும் உடனடியாக வாசன் & நண்பர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

Also Read | இந்த தேதியில்ல தளபதி 67 படத்தோட அப்டேட் வருமா?.. பிரபல கல்லூரியில் பேசிய லோகேஷ் கனகராஜ்!

தொடர்புடைய இணைப்புகள்

TTF Vasan admitted in hospital for treatment and discharge

People looking for online information on TTF Vasan, TTF Vasan admitted in hospital will find this news story useful.