www.garudabazaar.com

அட, Bigg Boss-ஐ தொடந்து பிரபல சமையல் நிகழ்ச்சியில் ஜிபி முத்து.. அட்டகாசமான ட்ரெய்லர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த மிகப் பிரபலமான ரியாலிட்டி ஷோ பிக்பாஸ் என்று சொன்னால் பிக்பாஸ் அடுத்ததாக இன்னொரு ஷோ அனைவரையும் கவர்ந்தது.

GP Muthu in cook with comali season 4 after bigg boss

Also Read | "என்கிட்ட இந்த பாச்சா எல்லாம் பலிக்காது".. விக்ரமன் முடிவால் அசிம் அதிருப்தி!!.. பரபர Bigg Boss

சொல்லப்போனால் இல்லத்தரசிகள் உட்பட வீட்டிலிருக்கும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்த இன்னொரு முக்கியமான ஷோ "குக் வித் கோமாளி". இந்த ரியாலிட்டி ஷோ, இதுவரை விஜய் டிவியில் 3 சீசன்களாக ஒளிபரப்பாகி வந்தது. சமையல் போட்டியை மிகவும் வித்தியாசமாகவும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் காண்பிக்கும் இந்த ஷோவுக்கு பல ரசிகர்கள் உருவாகினர். முதலாவது சீசனில் பல செலிபிரிட்டிகள் சமைப்பதற்காக போட்டியாளர்களாக இந்த ஷோவில் களமிறக்கப்பட்டனர்.

GP Muthu in cook with comali season 4 after bigg boss

முன்னதாக அஸ்வின், புகழ், பவித்ரா, சிவாங்கி, குரேஷி, சூப்பர் சிங்கர் பரத், KPY சரத் , மணிமேகலை, சுனிதா, KPY பாலா உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களை கவர்ந்தனர். இந்த நிகழ்ச்சிக்கு பிரபல செப் தாமோதரன் மற்றும் வெங்கடேஷ் பட் ஆகிய இருவரும் நடுவர்களாக உள்ளனர். இந்த நிகழ்ச்சியை ரக்ஷன் தொகுதி வழங்கி வருகிறார். அவ்வப்போது மதுரை முத்து, உள்ளிட்ட பலரும் கலந்து கொள்வதுண்டு.

இந்நிகழ்ச்சியின் முதல் சீசனில் வனிதா வெற்றி பெற்றார். 2 வது சீசனில் கனி வெற்றி பெற்றார். 3 வது சீசனில் ரோஷினி ஹரிபிரியன், வித்யூலேகா, ஸ்ருதிகா மற்றும் பலர் சமையல் செய்பவர்களாக கலந்துகொண்டனர். இவர்களுள் ஸ்ருதிகா வெற்றி பெற்றார்.

GP Muthu in cook with comali season 4 after bigg boss

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் கலக்கலான 4 வது சீசன் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இதில் மணிமேகலை, சுனிதா என முந்தைய சீசன்களில் கோமாளிகளாக உள்ளவர்கள் கலந்து கொள்ளும் நிலையில், ஓட்டேரி சிவா, சிங்கப்பூர் தீபன் உள்ளிட்ட பலரும் புதிய கோமாளிகளாக கலந்து கொள்வதாக ப்ரோமோ மூலம் தெரிய வருகிறது. மேலும் விஜே ரக்‌ஷன் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதாக தெரிகிறது.

இந்த நிலையில், குக் வித் கோமாளி 4 ஆவது சீசனில் பிரபல யூ டியூபர் ஜிபி முத்து கோமாளியாக களமிறங்க உள்ளது ப்ரோமோ மூலம் தெரிய வருகிறது. முன்னதாக, யூ டியூபில் வீடியோக்கள் பதிவிட்டு மக்கள் மத்தியில் அதிகம் பிரபலம் ஆனவர் ஜிபி முத்து. அதிலும், நேயர்கள் எழுதும் கடிதத்தை அவர் படித்து வீடியோக்கள் வெளியிடுவது பெரிய அளவில் கவனம் பெறவும் செய்தது.

GP Muthu in cook with comali season 4 after bigg boss

இதற்கடுத்து ஒரு சில திரைப்படங்களிலும் நடித்திருந்த ஜிபி முத்து, தற்போது நடைபெற்று வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக களமிறங்கி இருந்தார். முதல் இரண்டு வாரங்கள் சிறந்த போட்டியாளராக வலம் வந்த ஜிபி முத்துவுக்கென பிரத்யேக ரசிகர்கள் கூட்டம் உருவாகி இருந்தது. ஆனால், தனது மகன் மற்றும் குடும்பத்தினரை பார்க்க வேண்டும் என தானாக முன் வந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்தும் வெளியேறி இருந்தார் ஜிபி முத்து. இதற்கடுத்து, திரைப்படங்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார் ஜிபி முத்து.

அப்படி ஒரு சூழலில், தற்போது கோமாளியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஜிபி முத்து களமிறங்க உள்ளதாக தெரியும் நிலையில், இந்த நிகழ்ச்சியையும் பார்வையாளர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

 

Also Read | AR ரஹ்மான், மகன் அமீனுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. வைரல் Pic!!

தொடர்புடைய இணைப்புகள்

GP Muthu in cook with comali season 4 after bigg boss

People looking for online information on Cook With Comali 4, Cook With Comali Season 4, GP in Muthu Cook With Comali, GP MUTHU will find this news story useful.