www.garudabazaar.com
iTechUS

"நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன்".. Bigg Boss- க்கு பின் அசிம் வெளியிட்ட முதல் வீடியோ!!..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் சமீபத்தில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன், பெரிய அளவில் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது.

Azeem posted first video after bigg boss title winner

                            Images are subject to © copyright to their respective owners.

Also Read | இந்த தேதியில்ல தளபதி 67 படத்தோட அப்டேட் வருமா?.. பிரபல கல்லூரியில் பேசிய லோகேஷ் கனகராஜ்!

இந்த சீசனில் மொத்தம் 21 பேர் போட்டியாளர்களாக களமிறங்கி இருந்த நிலையில், அனைத்து எபிசோடுகளும் விறுவிறுப்பாகவும் நிறைந்த படி சென்றது.

மொத்தமுள்ள போட்டியாளர்களில் இருந்து அசிம், விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகியோர், Finale சுற்றுக்கு முன்னேற்றம் கண்டிருந்தனர். இதில், ஷிவின் 3 ஆவது இடம் பிடித்திருந்தார். இதற்கடுத்து, பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அசிம் டைட்டில் வின்னர் என கமல்ஹாசன் அறிவித்திருந்தார். மேலும் அவருக்கு 50 லட்ச ரூபாயும், காரும் பரிசாக வழங்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ள அசிம், முதல் முறையாக வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், தனது ரசிகர்கள் மற்றும் தனக்கு ஆதரவளித்த அனைத்து தமிழ் மக்களுக்கும் தனது நன்றிகளையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Azeem posted first video after bigg boss title winner

Image Credit : vijay television

அதில் பேசும் அசிம், "உலகெங்கிலும் வாழும் என் தமிழ் இனிய சொந்தங்களுக்கு என்னுடைய நன்றி கலந்த வணக்கங்கள். பிக் பாஸ் சீசன் 6 முடிஞ்சிருச்சு. முதல்ல நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன். ரெண்டு நாள் என்னால போன் பாக்க முடியல, பிக் பாஸ் முடிச்சுட்டு வெளிய வந்ததுக்கு அப்புறம் உலகத்தை ரொம்ப நாள் கழிச்சு பார்க்கிறோம். மனிதர்கள் எல்லாம் பார்க்கும்போது Traumaவில் இருந்து வெளியே வருவதற்கு எனக்கு ரெண்டு மூணு நாள் ஆயிடுச்சு.

அதுக்கப்புறம் இன்னைக்கு தான் நான் போன் எடுத்தேன். எடுத்ததும் முதல்ல என் மக்களுக்கு நான் வீடியோ போடணும், அவங்க இல்லன்னா நான் இல்ல, அப்படின்னு சொல்லிட்டுதான் இந்த வீடியோ போட்டு இருக்கேன். என்னுடைய தமிழ் பெருங்குடி சொந்தங்களுக்கும் உலகெங்கிலும் வாழும் என் இனிய தமிழ் மக்களுக்கும் என் உள்ளத்தில் நிறைந்திருக்கும் அன்பு நெஞ்சங்களுக்கும், தமிழ் இல்லங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் எனது உயிர் அன்பு உறவுகளுக்கும் இந்த எளிய தாய்மகனின் நன்றி கடந்த கோடான கோடி வணக்கங்கள்.

Azeem posted first video after bigg boss title winner

Images are subject to © copyright to their respective owners.

பிக் பாஸ் சீசன் சிக்ஸ் கப் அடிச்சிட்டோம் ரொம்ப நன்றி. இந்த பிக் பாஸ் வீட்ல 106 நாள் விளையாடினது என்னமோ நான் தான். ஆனா நான் விளையாடும்போது பல ஏச்சுகளையும், பேச்சுகளையும் பல துன்பங்களையும், பல சங்கடங்களையும் நான் சந்தித்திருக்கிறேன். சந்திக்கும்போதெல்லாம் நான் நினைச்சது, நம்மள நாம நம்பலனா வேற யாரும் நம்புவாங்கன்னு. என்னோட நம்பிக்கையை நீங்க மெய்படுத்துனீங்க. ஒவ்வொரு வாரம் என்னை நாமினேட் பண்ணும் போதும், 14 வாரமும் நான் நாமினேட் ஆனாலும் ஃபைனல் போவேன் அப்படின்னு சொன்ன வார்த்தையை நிஜமாக்கியது என்னுடைய தமிழ் மக்கள் தான். நீங்க இல்லன்னா நான் இந்த அசிம் இல்ல" என உருக்கத்துடன் பேசி இருந்தார்.

இன்னும் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அசிம், பிக் பாஸ் வீட்டில் கூறியது போலவே தனக்கு பரிசாக கிடைத்த 50 லட்சம் ரூபாயில் இருந்து 25 லட்ச ரூபாயை கொரோனா தொற்றின் காரணமாக பெற்றோர்களை இழந்தம் மாணவ, மாணவிகளின் படிப்பு செலவுக்காக அளிக்க போவதாகவும் தெரிவித்துள்ளார்.

Also Read | மகள் பிறந்தாளை அரசு பள்ளி குழந்தைகளுடன் கொண்டாடிய சினேகா & பிரசன்னா! நெகிழ்ச்சியான வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Azeem posted first video after bigg boss title winner

People looking for online information on Azeem, Azeem posted first video after bigg boss, Bigg Boss 6, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Vijay tv will find this news story useful.