www.garudabazaar.com

"யூடியூப் சேனல் ஹேக் ஆயிடுச்சு".. குக் வித் கோமாளி புகழ் பதிவிட்ட பரபரப்பு Post !

முகப்பு > சினிமா செய்திகள்

By |

குக் வித் கோமாளி புகழ் யூடியூப் சேனல் ஹேக் செய்யப்பட்டுள்ளது.

Cook with Comali Pugazh YouTube channel hacked

Also Read | "தன்மையான மனிதர்".!! துணிவு லுக்கில் அஜித்.. பிரபல நடிகரின் மேனேஜர் பகிர்ந்த Pics..

குக் வித் கோமாளி நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பட்டிதொட்டி எங்கும் ஹிட்டடித்தது. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் அந்த நிகழ்ச்சிக்கு ஏகோபித்த வரவேற்பு இருந்தது.

அதில் நடித்த அஸ்வின்,பவித்ரா, ஷிவாங்கி, புகழ், தர்ஷா, பாலா, பாபா பாஸ்கர், ரித்திகா என அனைவருக்கும் அவர்களுக்கென்ற தனித்த ரசிகர்கள் பட்டாளம் உருவானது.

புகழ் மற்றும் ஷிவாங்கி சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர். குறிப்பாக புகழ் நடிப்பில் வலிமை, சபாபதி, என்ன சொல்லப் போகிறாய், எதற்கும் துணிந்தவன், யானை ஆகிய படங்கள்  இந்த ஆண்டு ரிலீஸ் ஆகின.

Cook with Comali Pugazh YouTube channel hacked

முன்னதாக 2016-ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான சிரிப்புடா என்கிற நகைச்சுவை நிகழ்ச்சியில் பிரபலமான புகழ், தொடக்கத்தில் பெண் வேடமிட்டு பல நகைச்சுவை கான்செப்ட்களில் நடித்து வந்தார்.

தற்போது ஜூ கீப்பர் என்கிற படத்தில் ஹீரோவாகவும் நடித்து வரும் புகழ், தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வருவதுடன், அவ்வப்போது விஜய் டிவி நிகழ்ச்சிகளிலும் பங்குபெற்று வருகிறார். 

Cook with Comali Pugazh YouTube channel hacked

இதனிடையே, புகழ் பென்ஸி என்கிற பெண்ணை 5 வருடங்களாக காதலித்து சில நாட்களுக்கு முன் திருமணம் செய்தார்.

இந்து முறைப்படியும், பென்ஸியா இஸ்லாம் மதத்தைச் சார்ந்தவர் என்பதால் இஸ்லாமிய முறைப்படியும் புகழ் திருமணம் செய்துகொண்டார்.

Cook with Comali Pugazh YouTube channel hacked

அவ்வப்போது தனது மனைவியுடன் சுற்றுலா மற்றும் கொண்டாட்ட வீடியோ & புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவதை வாடிக்கையாக கொண்டிருப்பவர் புகழ். அதேபோல் பரட்டை புகழ் என்ற பெயரில் யூடியூப் பக்கத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில் தனது யூடியூப் சேனல் ஹேக் செய்யப்பட்டுள்ளது என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகழ் பதிவிட்டுள்ளார். "என்னடா நீங்க இப்படி பண்றீங்க?" என குமுறி புகழ் பதிவிட்டுள்ளார்.

Also Read | "எனக்கு இங்க இருக்கவே பிடிக்கல.. வெளியே போய்டணும்".. திரும்பவும் புலம்பிய தனலட்சுமி..!

தொடர்புடைய இணைப்புகள்

Cook with Comali Pugazh YouTube channel hacked

People looking for online information on Cook with comali, Cook with comali pugazh, Pugazh You tube channel will find this news story useful.