www.garudabazaar.com

THUNIVU: "H. வினோத் அந்த டிவி ஷோ பார்ப்பேன்னு சொன்னார்".. மனம் திறந்த பிரபல துணிவு பட நடிகர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படம் 'துணிவு'.

Cook with Comali Dharshan about Thunivu H Vinoth

வரும் 2023 பொங்கலுக்கு துணிவு படம் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Cook with Comali Dharshan about Thunivu H Vinoth

மேலும் இந்த படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை கலைஞர் தொலைக்காட்சி கைப்பற்றி உள்ளது. ஓடிடி ஒளிபரப்பு உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ‌

இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய,   கலை இயக்குனராக மிலன் பணிபுரிய,  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார். சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார்‌‌.

இந்த படத்தின் 3 சிங்கிள் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இதில் சில்லா சில்லா பாடலை வைசாக் எழுத அனிருத் ரவிச்சந்திரன் பாடியுள்ளார். இரண்டாவது சிங்கிள்  காசேதான் கடவுளடா பாடலை வைசாக் எழுதி பாடியுள்ளார். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இந்த படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடல் கேங்ஸ்டா வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மூன்றாவது சிங்கிள் பாடலை சபீர் பாடியுள்ளார்.

Cook with Comali Dharshan about Thunivu H Vinoth

இன்று துணிவு படத்தின் கதாபாத்திர போஸ்டர்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு துணிவு படத்தில் நடித்துள்ள பட்டிமன்ற பேச்சாளர் மோகன சுந்தரம் & குக் வித் கோமாளி தர்ஷன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Cook with Comali Dharshan about Thunivu H Vinoth

துணிவு படம் குறித்த பல கேள்விகளுக்கு இருவரும் பதில் அளித்தனர். குறிப்பாக நடிகர் தர்ஷன், "இயக்குனர் வினோத்திடம் என்ன எப்படி துணிவு படத்திற்காக தேர்ந்தெடுத்தீங்க? என கேட்டேன். அதற்கு, "இல்ல தலைவரே நான் குக் வித் கோமாளி பார்ப்பேன். பாத்து உங்களை பிடிச்சு இருந்தது. சரி ஓகே கூப்ட்றலாம்" என இயக்குனர் H.வினோத்" கூறியதாக தர்ஷன் பேட்டியில் கூறியுள்ளார்.

THUNIVU: "H. வினோத் அந்த டிவி ஷோ பார்ப்பேன்னு சொன்னார்".. மனம் திறந்த பிரபல துணிவு பட நடிகர்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Cook with Comali Dharshan about Thunivu H Vinoth

People looking for online information on Ajith Kumar, AK, Thunivu will find this news story useful.