திரைப்பட இயக்குநரும் நடிகர் விஜயின் தந்தையுமான எஸ்ஏ சந்திரசேகர் இதுவரை 69 படங்களை இயக்கி இருக்கிறார். தற்போது இயக்கியுள்ள படத்தின் பெயர் நேற்று பத்திரிகையாளர்கள் முன்னிலையில் அறிவிக்கப்பட்டது

இந்தப்படம் எஸ்ஏ சந்திரசேகரின் 70வது மற்றும் கடைசி படமாகும். இந்த படத்திற்கு கேப்மாரி என பெயிரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நடிகர் ஜெய் ஹீரோவாக நடிக்கிறார். கேப்மாரி படத்துடன் இயக்குநர் எஸ்ஏ சந்திரசேகர் ஒய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கேப்மாரி என்பது சென்னை பாஷையாகும். கேப்மாரி என்றால் திருடன், நியாயமில்லாதவன் என்று பொருள்.
விஜய் நடிக்கும் 63வது படத்தின் பெயர் அண்மையில் வெளியானது. அந்த படத்தின் பெயர் பிகில் ஆகும், அதுவும் சென்னை பாஷைதான். தற்போது தந்தையும் சென்னை மொழியில் பெயர் வைத்துள்ளார்.
சமீபத்தில் வெளியான தளபதி பிகில் பட போஸ்டரில் விஜய் காவி வேட்டி கட்டியிருந்தார் இதைப்பற்றி எஸ்ஏசி யிடம் கேட்டபோது, ''என்னிடம் என் படத்தை பற்றி கேளுங்கள் விஜய்யை பற்றி கேட்காதீர்கள். நான் சொன்னது என்னுடைய கருத்து மட்டுமே. அவர் வேட்டி கட்டியிருந்தால் அவரிடம் போய் கேளுங்கள். என்னிடம் கேட்காதீர்கள்'' எனக் கோபமானார்.
"பிகில்" போஸ்டரில் காவி வேஷ்டி - கோபமாக பதில் அளித்த விஜய்யின் அப்பா! வீடியோ