www.garudabazaar.com

PS2 ஆடியோ லான்சை தொடர்ந்து.. தங்கலான் ஷூட்டிங்கில் விக்ரம்.. வைரலாகும் லேட்டஸ்ட் ஸ்டில்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'தங்கலான்' படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் பகுதியில் இருந்து சீயான் விக்ரம் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

Chiyaan Vikram Thangalaan Movie Latest Image KGF

நடிகர் விக்ரம் நடிப்பில் 'தங்கலான்' படத்தை பா. ரஞ்சித் இயக்கி வருகிறார். இந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படத்தின் ஒளிப்பதிவை கிஷோர் குமாரும், படத்தொகுப்பை செல்வாவும் கவனித்துக்கொள்கின்றனர். எஸ்.எஸ்.மூர்த்தி கலை இயக்குனராக பணிபுரியும் இந்தப் படத்தில் ஏகன் ஏகாம்பரம் ஆடை வடிவமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்தப் படத்தில், பசுபதி, மாளவிகா மோகனன், பார்வதி ஆகியோரும் நடிக்கின்றனர். இந்த படம் 18 ஆம் நூற்றாண்டு பின்னணியில் கோலார் தங்க வயலை அடிப்படையாகக் கொண்டு உருவாகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது கோலார் தங்க வயல் பகுதியில் நடந்து வருகிறது.  ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பில் பிரபல ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டகிரோன், இணைந்துள்ளார்.

இந்த படத்தின் ஆடியோ உரிமத்தை பிரபல டைம்ஸ் மியூசிக் நிறுவனம் (Junglee Music) கைப்பற்றியுள்ளது.  ஓடிடி உரிமத்தை பிரபல நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Chiyaan Vikram Thangalaan Movie Latest Image KGF

இந்நிலையில் சியான் விக்ரம் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில் தங்கலான் ஷூட்டிங் நடைபெற்று வரும் கோலார் தங்க வயலில் இருந்து சீயான் விக்ரம் தமது புகைப்படத்தை பகிர்ந்து, "PS2 தங்கலான்" என தலைப்பிட்டு புகைப்படத்தை விக்ரம் வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Chiyaan Vikram Thangalaan Movie Latest Image KGF

People looking for online information on PS2, Thangalaan, Vikram will find this news story useful.