www.garudabazaar.com

"அடுத்து ஒரு பெரிய ஆபரேஷன் இருக்கு.. உயிர் கூட போகலாம்".. கலங்கவைத்த வீரம் பட நடிகர்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பியும் ஆவணப்பட இயக்குனர் ஜெயக்குமாரின் மகனுமான  நடிகர் பாலா (பாலக்குமார்) கொச்சியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Veeram Actor Bala admitted in hospital kochi வீரம் நடிகர் பாலா

நடிகர் பாலா 'வீரம்' படத்தில் தல அஜீத்தின் தம்பியாக நடித்தார். ஏற்கனவே அவர் தமிழில் 'அன்பு' என்கிற படத்தில்  அறிமுகமானார். 'அப்பா அம்மா செல்லம்' என்கிற படத்தில் அவர் ரசிகர்களிடம் நன்கு பிரபலமடைந்தார். பின் நடிகர் பாலா மலையாளத்தில் Big B என்கிற படத்தில் மம்முட்டியின் தம்பியாக முருகன் என்கிற தமிழ் ஸ்டண்ட் ஆக்டராக நடித்தார் பாலா. இந்த படத்தின் மூலம் கேரள ரசிகர்கள் மத்தியில் பிரபல நாயகனானார் பாலா.

Veeram Actor Bala admitted in hospital kochi வீரம் நடிகர் பாலா

மோகன்லாலின் புலிமுருகன் படத்திலும் வில்லனாக நடித்து மிரட்டி இருந்தார். தமிழில் அண்ணாத்த படத்தில் பல வில்லன்களில் ஒருவராக பாலா நடித்திருந்தார்.  இவரது முதல் மனைவி அம்ருதாவை 2019ல் விவாகரத்து செய்திருந்த நிலையில், இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு இரண்டாவது திருமணம் செய்து கொண்ட புகைப்படங்களை சமூகவலைதளத்தில் வெளியிட்டு இருந்தார்.

சில நாட்களுக்கு முன் நடிகர் பாலாவுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதை தொடர்ந்து கொச்சியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். அச்சயமத்தில் இயக்குனர் சிறுத்தை சிவா, அவருடைய கல்லூரி கால நண்பரும் ஒளிப்பதிவாளருமான வெற்றி பழனிச்சாமி, நடிகர் உன்னி முகுந்தன் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்த புகைப்படங்கள் அந்த சமயம் வெளியாகியிருந்தன.

Veeram Actor Bala admitted in hospital kochi வீரம் நடிகர் பாலா

இந்நிலையில் தனது மனைவியுடன் திருமண நாளை முருத்துவமனையில் வைத்து கொண்டாடிய நடிகர் பாலா, “நான் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று நலமாகி வருகிறேன். அடுத்து ஒரு பெரிய ஆபரேஷன் உள்ளது. அதில் மரணம் கூட நேரிடலாம். ஆனால் அதைவிட கூடுதலாக உங்கள் பிரார்த்தனைகளால் நான் நலமுடன் மீண்டு வரவும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இப்போதைக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தலின் பேரில் மருத்துவமனையில் இருக்கிறேன்” என உருக்கமாக பேசி வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.

Veeram Actor Bala admitted in hospital kochi வீரம் நடிகர் பாலா

People looking for online information on Ajith Movie, Siruthai Siva, Veeram actor Bala, Veeram actor Bala admitted in hospital, Veeram actor Bala hospitalised will find this news story useful.