"சுப்ரமணியம் Uncle போல அக்கறையான ஒருவரை".. அஜித் தந்தை குறித்து சியான் விக்ரம் உருக்கம்!
முகப்பு > சினிமா செய்திகள்நடிகர் அஜித்குமார் தந்தை சுப்ரமணியமின் மறைவுக்கு நடிகர் விக்ரம் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Also Read | இறுதிச் சடங்கில் தந்தையின் உடலை சோகத்துடன் தாங்கி வந்த அஜித்.. உருக்கமான வீடியோ!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பிறகு சமீபத்தில் நடிகர் அஜித் நடிப்பில் பல ரசிகர்களின் எதிபார்ப்பிற்கு இடையில் பொங்கலை முன்னிட்டு ஜனவரி மாதம் 10 ஆம் தேதி துணிவு திரைப்படம் வெளிவந்தது.
துணிவு திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. துணிவு படம் கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி உள்ளது. மேலும் தியேட்டரை தொடர்ந்து ஓடிடி தளத்திலும் துணிவு படம் பலத்த வரவேற்பைப் பெற்று வருகிறது.
நடிகர் அஜித்குமார் அடுத்ததாக லைக்கா நிறுவனம் தயாரிப்பில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் நடிகர் அஜித் குமாரின் தந்தை சுப்ரமணியம் வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை சென்னையில் நடிகர் அஜித் குமார் இல்லத்தில் காலமானார். அவருடைய மறைவுக்கு தமிழக அரசின் முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பாமக நிறுவனர் ராமதாஸ், சசிகலா, விஜயபாஸ்கர், விஜய் வசந்த், நடிகர் ஜி எம் சுந்தர், நடிகை சாக்ஷி அகர்வால், நடிகர் சிவா ஆகியோர் அறிக்கை வெளியிட்டு இரங்கல் தெரிவித்துள்ளனர். அஜித்குமார் தந்தையார் பி.எஸ்.மணியின் இறுதி சடங்கு பெசண்ட் நகர் மின்மயானத்தில் நடைபெற்றது.
இறுதிச் சடங்கில் நடிகர் அஜித் குமார், நடிகை ஷாலினி அஜித்குமார், நடிகர் ரிச்சர்ட் ரிஷி, நடிகர் சிவா உள்ளிட்ட அஜித்குமாரின் உறவினர்கள் கலந்து கொண்டனர். மேலும் சுரேஷ் சந்திரா, அனு வர்தன், மருத்துவர் விஜய் ஷங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிலையில் நடிகர் விக்ரம் தமது டிவிட்டர் பக்கத்தில், "அஜித், அவரது தாயார் மற்றும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஒருவருடைய அப்பாவின் இழப்பு.. குறிப்பாக சுப்ரமணியம் அங்கிளைப் போல அக்கறையுடனும் இனிமையாகவும் இருக்கும் ஒருவரை ஈடுகட்ட முடியாது. அவரது ஆன்மா சாந்தியடையட்டும். உறுதியாக இருங்கள் அஜித்." என ட்வீட் செய்து இரங்கல் தெரிவித்துள்ளார்.
My heartfelt condolences to Ajith, his mother and family. The loss of one’s dad .. especially someone as caring and sweet as Subramaniam uncle can never be compensated. May his soul rest in peace. Stay strong Ajith. pic.twitter.com/eY081S4WQG
— Vikram (@chiyaan) March 24, 2023
Also Read | அஜித் தந்தை மறைவு.. இறுதி அஞ்சலி செலுத்திய A.R. முருகதாஸ், மகிழ் திருமேனி, AL விஜய்! வீடியோ
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Actor Ajith Kumar At His Father Funeral Besant Nagar
- Actor Ajith Kumar Father PS Mani Funeral Video
- Ajith Kumar Brothers Statement Regarding Their Father Subramaniam Demise
- Udhayanidhi Stalin Pays Respect To Late Ajith Kumar Father
- Tamil Nadu Chief Minister Mk Stalin Condolences To Ajith Father Demise
- Alphonse Puthren New Film With Ajith Kumar Movies Producer
- Jayaram For Mahesh Babu Pooja Hegde SSMB28 Trivikram Srinivas
- Oo Solriya Oo Oohm Solriya Ramar Fun With Vikraman, Rachitha
- Ajith Kumar AK With His Son Advik In Dubai Football Ground
- Actor Ajith Kumar Shalini Family Dubai Vacation Video
- Actress Anicka Vikraman Exclusive Interview அனிகா விக்ரமன்
- Pa Ranjith Vikram Thangalaan Movie Shooting Spot BTS Image
தொடர்புடைய இணைப்புகள்
- காசு பணத்தை விட Family தான் முக்கியம்🔥 Busy-யான Life-லயும் குடும்பத்தோடு Time Spent செய்யும் AK😍
- உதயம் THEATRE -லே வெளிய நிப்போம் 😢| SASIKUMAR EXCLUSIVE INTERVIEW #shorts #shortvideo
- வெளிநாட்டில் குடும்பத்துடன் THALA அஜித்.. இணையத்தில் VIRAL ஆகும் புகைப்படம். | AJITH KUMAR
- ரெய்டர்களின் 'ரூட்டு தல'😍 BMW-ல் இந்தியாவை அலச போகும் AK🔥 96 RAM போல மீண்டும் பயணம்
- 36 வருஷம் முன்னாடி🔥🔥 இவரு பிறக்கும்போதே KAMAL ரசிகனா தான் பிறந்து இருக்காரு..😮❤️ #LokeshKanagaraj
- LCU-ல Mankatha😲 Leo-வ Meet பண்ண Rolex💥 Stephen Devassy LIVE BGM Performance🔥
- "100 கோடி சம்பளம் வாங்கி என்ன பண்ணுவாங்க?" 🙄 Sunaina ROFL Interview
- "സൂര്യ മേയ് മാസം Shooting-ന് പോകില്ല "❤️😍| Jyotika Reveals
- நடிகர் மனோபாலா இரங்கல் | பெரும் சோகம்.. நடிகர் மயில்சாமி மரணம்.! இரங்கல் தெரிவிக்கும் திரையுலகினர்..! - Slideshow
- நடிகர் யோகிபாபு ட்வீட் | பெரும் சோகம்.. நடிகர் மயில்சாமி மரணம்.! இரங்கல் தெரிவிக்கும் திரையுலகினர்..! - Slideshow
- விஜயகாந்த் தரப்பில் வெளியான இரங்கல். | பெரும் சோகம்.. நடிகர் மயில்சாமி மரணம்.! இரங்கல் தெரிவிக்கும் திரையுலகினர்..! - Slideshow
- "சிரிக்க வைக்கும் சித்தனே. சிவனுடைய பக்தனே." - நடிகர் சாம்ஸ் தமது இரங்கல் | பெரும் சோகம்.. நடிகர் மயில்சாமி மரணம்.! இரங்கல் தெரிவிக்கும் திரையுலகினர்..! - Slideshow