Pandian Stores : "கதையில உங்களாலதான் ட்விஸ்ட்".. ரசிகர்கள் பாராட்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ‘ஐஸ்வர்யா’!
முகப்பு > சினிமா செய்திகள்விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிக முக்கியமான தொடர்களில் ஒன்றாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் இருந்து வருகிறது. பாண்டியன் மளிகை ஸ்டோர்ஸ் வைத்திருந்து பின்னர் முன்னேறும் சகோதரர்கள் மற்றும் அவர்களது மனைவிமார்கள் கொண்ட கூட்டு குடும்பத்தின் நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட இந்த தொடரை மக்களும் ஆவலுடன் கண்டுகளித்து வருகின்றனர்.
இத்தொடரில் கண்ணனின் மனைவியாக வரும் ஐஸ்வர்யா ரோலில் ஐஸ்வர்யாவாக நடித்து வந்த தீபிகா மாறி, நடிகை சாய் காயத்ரி பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்துவந்தார். தற்போது சாய் காயத்ரி, அதிலிருந்து விலக, மீண்டும் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் விஜே தீபிகா நடிக்கத் தொடங்கியுள்ளார்.
முன்னதாக மீனா தங்கை திருமணத்தில் அண்ணன் தம்பிகள் அனைவரும் தனித்தனியே மொய் வைக்க, கம்ப்யூட்டர் மொய் டேட்டேபேஸில் ஜீவா - மீனாவின் பெயர் மட்டும் இல்லாமல் போகிறது. இது மீனாவின் தந்தை மூலமாக மீனா & ஜீவாவுக்கு தெரியவர, ஜீவா தன் மூத்த அண்ணன் மூர்த்தி உள்ளிட்ட சகோதரர்களிடம் ஆவேசமாக வந்து அழுது கத்துகிறார். அனைவருடனும் உறவை துண்டித்துக் கொள்கிறார். இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் பெருத்த குழப்பம் ஏற்படுகிறது.
ஆனால் இந்த குழப்பத்துக்கெல்லாம் காரணம் கண்ணன் செய்த வேலைதான். ஆம், அவரிடம் மொய்க்கவரை கொடுத்த அவரது அண்ணன் மூர்த்தி 50 ஆயிரம் பணத்தை கொடுத்து பாண்டியன் ஸ்டோர்ஸ் பெயரில் மொய் போடச் சொல்லி அழுத்தம் திருத்தமாக சொல்லி அனுப்பினார். ஆனால் கண்ணனோ, மொய் வைக்கும்போது கதிர் - முல்லை சார்பிலான மொய் பணத்தை முல்லையின் தாயாரிடம் இருந்து பெற்றுக்கொண்டு செல்கிறார். இப்படி மொத்தம் 3 மொய் கவரை கண்ணன் கையில் வைத்துள்ளார். ஒன்று தங்களுடைய சார்பில், இன்னொன்று கதிர் - முல்லை சார்பில் தனியே இருந்த மொய்ப்பணம், 3வது பாண்டியன் ஸ்டோர்ஸ் பெயரிலான மொய் பணம். அதில்தான் ஜீவா & மீனாவுக்கான மொய்ப்பணம் உள்ளது.
ஆனால் கண்ணனோ பாண்டியன் ஸ்டோர்ஸ் பெயரில் போடச்சொல்லி தன் அண்ணன் சத்தியமூர்த்தி கொடுத்த மொய்ப்பணத்தை, பாண்டியன் ஸ்டோர்ஸ் பெயரில் போடாமல் சத்தியமூர்த்தி - தனலட்சுமி பெயரில் போட்டுவிட்டார். இதனால் ஜீவா - மீனா தம்பதி பெயர் மட்டும் மொய் லிஸ்டில் இடம்பெறாமல் போகிறது. நடப்பது மீனாவின் தங்கை திருமணம் என்பதால், மீனாவின் தந்தை இதை மீனாவிடம் கேட்டுவிட்டதாலும் மீனாவுக்கு அவமானமாகிறது. இதை அவர் ஜீவாவிடம் கேட்க, ஜீவாவோ ஏமாற்றத்தால் கோபமும் அழுகையுமாக அண்ணன் மூர்த்தியிடம் சென்று, இதுநாள் வரை தன் மனதில் இருந்த அத்தனையையும் கொட்டி தீர்த்து விடுகிறார்.
மேலும் அவரை அனைவரும் சமாதானப்படுத்தி, “வா ஜீவா வீட்டுக்கு போகலாம்” என்று அழைக்கின்றனர். அதற்கு ஜீவாவோ, “நான் வரமாட்டேன், அந்த வீடு உங்கள் வீடு. உங்கள் வீட்டுக்கு நான் வரமாட்டேன். உங்கள் தம்பிகளை அழைத்துக் கொண்டு கிளம்புங்கள்” என்று ஆவேசமாக கூறுகிறார்.
இதனால் ஜீவாவை தவிர மற்ற அனைவரும் வீட்டுக்கு வந்துவிட, இதனிடையே கண்ணனை வீட்டுக்கு வந்த பின்பு தனம் கேள்வி கேட்க, அப்போது கண்ணனின் மனைவி ஐஸ்வர்யா கோபத்தில் பொங்கிவிட்டார். தனத்தை எதிர்த்து பேசினார். அப்போது முல்லை, கண்ணனும் ஐஸ்வர்யாவும் பாதி சம்பளத்தை மட்டுமே வீட்டுக்கு கொடுத்ததாகவும், மீதி 2 மடங்கு சம்பளத்தை தாங்களே வைத்துக்கொண்டதாக போட்டு உடைக்க, ஐஸ்வர்யாவோ, தன் கணவரை அவமானப்படுத்தியதால் கோபத்தில் வெகுண்டெழுந்து கண்ணனுடன் வீட்டை விட்டு கிளம்பி சென்றுவிடுகிறார். முல்லையில் அம்மா வழி சொந்தம் என்பதால் மீனாவின் திருமணத்தில் மொய் வைக்கப்பட்டது. ஆனால் சம்பளம் வாங்கிவிட்டதால் தனியே மொய்வைக்கலாம் என்று கண்ணனிடம் சொன்னது ஐஸ்வர்யா தான். இந்நிலையில் ஜீவா மட்டும் பிரிந்து சென்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் இருந்து மேலும் சண்டையிட்டு பிரிந்துவிட்டார்கள் கண்ணனும் ஐஸ்வர்யாவும். ஏற்கனவே திருமண மண்டபத்தில் கண்ணனை மூர்த்தி அடிக்கும்போதே, அவரை கோவமாக அழைத்துக்கொண்டு ஐஸ்வர்யா தனியே போய் நின்றுவிட்டார்.
இந்நிலையில் ரசிகர்கள் விஜே தீபிகாவுக்கு புகழாரம் சூட்டி வருகின்றனர். அதிலும் ரசிகர் ஒருவர் விஜே தீபிகாவை குறிப்பிட்டு, “உங்களைவைத்து தான் கதையில் மிகப் பெரிய திருப்பங்கள் அரங்கேறுகின்றன. அருமையான எபிசோடுகள். இப்படியே வளருங்கள். நேர்மறையோ எதிர்மறையோ பேட்டரிக்கு இரு பக்கங்களும் உண்டு, எதுவாயினும் இந்த தருணத்தை மகிழ்ச்சியுடன் பாருங்கள்” என்று அந்த ரசிகர் குறிப்பிட்டிருப்பதை விஜே தீபிகா தம் இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் பகிர்ந்திருக்கிறார். இதே போல் தொடர்ந்து அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Actor Janardhanan On Pandian Stores Serial Problems
- Pandian Stores Sujitha House Warming Ceremony Photos
- KPY Champion Season 4 Pandian Stores Serial Spoof Video
- Pandian Stores Family Issue Aishwarya And Kannan Decision
- Jeeva Seperated From Family Pandian Stores New Promo
- Pandian Stores 22 March 2023 Full Episode பாண்டியன் ஸ்டோர்ஸ்
- Pandian Stores 2023 Feb 21 Episode Pandian Stores Update
- Jeeva Angry With Brothers Pandian Stores 2023 March 20th
- Pandian Stores Sensational Promo In Meena Family Marriage
- Where Is Your Self Respect Fan To Pandian Stores VJ Deepika
- Pandian Stores Sai Gayathri Replaced By VJ Deepika
- Pandian Stores Serial Update Jeeva Shout Out To Moorthy
தொடர்புடைய இணைப்புகள்
- "Pandian Stores குடும்பத்துல Jeeva-வ திரும்ப சேர விடமாட்டேன்" 😠 Janarthanan Interview
- "Pandian Stores வீட்டுல இருந்து வெளிய வர உண்மை காரணம் இது தான்" 😭 Jeeva Breaking Interview
- பிரிந்தது PANDIAN STORES குடும்பம் 💔 தம்பிக்கு துரோகம் செய்தாரா தம்பி? | Vijay Tv
- "இனிமேல் Pandian Stores Serial-ல நடிக்க மாட்டேன்" Sai Gayatri Quits Pandian Stores
- ராஜஸ்தான் காலை குளிரில்🥶ஜொலிக்கும்💎இந்த பொன்மகள்.💃😍😍
- "என்ன ஏன் கல்யாணம் பண்ண?"🙄 Pandian Stores Sujitha-விடம் சராமாரியாக கேள்வி கேட்ட கணவர் Dhanush😱
- "அன்னிக்கு Night Shoot முடிச்சுட்டு போறப்ப..."😥 VJ Chitra இப்படி பண்ணுவான்னு நினைக்கல😭 Sujitha😥
- "கனவுகள் நிறைஞ்ச ஒரு பொண்ணா தான் VJ Chitra-வ பாத்துருக்கேன்😯அவ பண்ணத ஏத்துக்கவே முடியல"😭 Sujitha 😥
- Sujitha உங்க கிட்ட இத நாங்க எதிர்பாக்கல😅 உண்மையை உடைத்த Pandian Stores Kumaran🤣
- Sujitha Dhanush குழந்தை வளர்க்குறதுல Expert போலயே🤩 Pandian Stores Family Shares Secrets😍
- "அன்னிக்கு Night Shoot-ல VJ Chitra கூட...😮எங்கள இப்படி ஏமாத்திட்டா"😭Emotional ஆன Sujitha Dhanush😥
- "என் கிட்ட எப்பவுமே PLAN B இருக்கும்"😅 Pandian Stores Sujitha Husband Shares His Marriage Moments🤩