தன் இசை வெளியீட்டு விழாவில் லாஸ்லியாவுடனான உறவு குறித்து சேரன்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Oct 14, 2019 09:21 PM
இயக்குநரும் நடிகருமான சேரன் முதன்மை வேடத்தில் நடித்துள்ள படம் 'ராஜாவுக்கு செக்'. பல்லட்டே கொக்கட் ஃபிலிம் ஹவுஸ் தயாரித்துள்ள இந்த படத்தை சாய் ராஜ் குமார் இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் சேரனுடன் இர்ஃபான், ஸ்ருஷ்டி டாங்கே, நந்தனா வர்மா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவு செய்ய, வினோத் எஜமான்யா இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய சேரன் பிக்பாஸில் லாஸ்லியாவுடனான உறவு குறித்து பேசினார். அப்போது, ''நாம எப்போ அப்பாவா உணர்கின்ற தருணம் மிகவும் முக்கியமானது. எனக்கு வாழ்க்கையில் பல தருணங்களில் உணர்த்தியிருக்கிறது. என் மகளை முதல் முதலாக கையில் ஏந்திய போது என்னிடம் துளியும் பணமில்லை. என் மனைவியின் பிரசவ செலவிற்கு நண்பனிடம் பணம் வாங்கி வந்து கட்டினேன். அப்பாவாக உணர்கின்ற தருணம் மிகவும் அழகானது.
எனக்கு அப்பா என்கின்ற உணர்வை ஆண்டவன் அடிக்கடி நியாபகப்படுத்திக்கிட்டே இருக்கான். சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூட அப்பாவாக வாழ வேண்டிய சூழல். அதனை உண்மையாக நேர்மையாக என் மகளை பார்ப்பது போல பார்த்துக்கிட்டேன். எந்த பாசாங்கும் போலியும் அதில் இல்லை. அந்த கேமிற்காக அல்ல. அந்த பாசத்தை பொய்யாக காண்பித்தேன் என்றால் இந்த உலக்த்தில் வாழ்வதற்கே அருகதை இல்லாதவன்'' என்றார்.
தன் இசை வெளியீட்டு விழாவில் லாஸ்லியாவுடனான உறவு குறித்து சேரன் வீடியோ