விஷால் - சுந்தர்.சியின் 'ஆக்சன்' படத்தில் பிக்பாஸ் சீசன் 3 நடிகை?
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Oct 14, 2019 07:27 PM
'அயோக்யா' படத்துக்கு பிறகு சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் 'ஆக்சன்' படத்தில் நடித்துள்ளார். இந்த படத்துக்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைக்கிறார். இந்த படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகியிருந்தது.

இந்த படத்தை டிரிடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் தமன்னா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, ராம்கி, யோகி பாபு, துஹான் சிங் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த படம் குறித்து பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர்களில் ஒருவரான சாக்ஷி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், இந்த படத்தில் தான் பின்னணி பேசியுள்ளதாக ஃபோட்டோவை வெளியிட்டுள்ளார்.
Lovely time dubbing for #sundarc sir movie #Action @VishalKOfficial @proyuvraaj pic.twitter.com/UgZP6Sk4CH
— Sakshi Agarwal (@ssakshiagarwal) October 14, 2019
Tags : Vishal, Bigg Boss 3, Sundar C, Hiphop Tamizha, Sakshi Agarwal