நம்பாதீர்கள் - ரசிகர்களுக்கு பிக்பாஸ் கவின் பட இயக்குநர் அறிவுறுத்தல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சிக்கு முன்பே கவின், சரவணன் மீனாட்சி தொடர் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றிருந்தார். மேலும் நட்புனா என்னனு தெரியுமா? படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகியிருந்தார்.

Director Shiva Aravind tweet about Bigg Boss 3 Kavin

பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் மிகவும் பரபரப்பான போட்டியாளராக காணப்பட்டார். மேலும் காதல், நட்பு என இவரது நடவடிக்கைகளால் பார்வையாளர்களின் முழுக்க கவனமும் இருந்தது.

இந்நிலையில் பிக்பாஸ் அறிவித்த ரூ.5 லட்சத்தை பெற்றுக்கொண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இது பார்வையாளர்களிடையே அதிர்ச்சியை அளித்தது. இந்நிலையில் நட்புனா என்னனு தெரியுமா பட இயக்குநர் சிவா அரவிந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், எல்லா நல்ல விஷயங்களும் உனக்கு நடக்கும்.

உனது ட்விட்டர் வருகைக்காக காத்திருக்கிறேன். Fake IDகளை நம்பாதீர்கள். சிரிப்பு எல்லா பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கும் வலிகளை மறைப்பதற்கும் சிறப்பான வழி'' என்று குறிப்பட்டுள்ளார்.